நடிகர் விஜய் அடுத்து என்ன செய்தார்? அதிகாரிகள் தரப்பில் இருந்து கசிந்த தகவல்

 

நடிகர் விஜய் அடுத்து என்ன செய்தார்? அதிகாரிகள் தரப்பில் இருந்து கசிந்த தகவல்

பிரிட்டன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு 40 லட்சம் ரூபாய் நுழைவு வரியை நடிகர் விஜய் செலுத்தியதாக வணிக வரித்துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

நடிகர் விஜய் அடுத்து என்ன செய்தார்? அதிகாரிகள் தரப்பில் இருந்து கசிந்த தகவல்

கடந்த 2012ஆம் ஆண்டு நடிகர் விஜய் பிரிட்டனிலிருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு கார் இறக்குமதி செய்து இருந்தார். இந்த காரை ஓட்டுவதற்கு முன்பாக கார் வாகன பதிவுக்காக வட்டார போக்குவரத்து அலுவலகம் சென்றார். அப்போது நுழைவு வரி தொடர்பான ஆட்சேபனை இல்லாத சான்றிதழ் சமர்ப்பிக்கும்படி போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து வணிகவரித்துறை அதிகாரிகளிடம் சென்று ஆட்சேபனை இல்லாத சான்றிதழ் கேட்டபோது, இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு முறைப்படியாக நுழைவு வரி செலுத்தினால் சான்றிதழ் வழங்குவதாகத் தெரிவித்தார். இதை எதிர்த்து நடிகர் விஜய் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதாவது தனக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை ரத்து செய்யும்படி அவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, விஜய்யின் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் நுழைவு வரியை செலுத்த வேண்டும் என்று சொன்னதோடு அதற்காக வரிவிலக்கு கேட்டதற்காக ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டு தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து நடிகர் விஜய் மேல் முறையீடு செய்திருக்கிறார்.

நடிகர் விஜய் அடுத்து என்ன செய்தார்? அதிகாரிகள் தரப்பில் இருந்து கசிந்த தகவல்

இந்த நிலையில் அவர் இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு 40 லட்சம் ரூபாய் வரைக்கும் நுழைவு வரியினை செலுத்தி விட்டதாக தகவல் வெளிவந்துள்ளன . இறக்குமதி காரை பதிவு செய்ய நுழைவு வரி செலுத்தியதற்கான ரசீது ஆட்சேபனை இல்லாத சான்றிதழும் அவசியம். இது அனைத்து இறக்குமதி கார்களுக்கும் பொருந்தும். ஜிஎஸ்டி சட்டத்திற்கு முன்பாக மதிப்பு கூட்டு வரி அமலில் இருந்தது. அப்போது இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டியது அவசியமாக இருந்தது. அப்படித்தான் நடிகர் விஜய் தன் காருக்கு மொத்தம் 40 லட்சம் ரூபாய் நுழைவு வரி செலுத்தி இருக்கிறார். முதலில் 8 லட்சம் ரூபாய் செலுத்தி வந்த நிலையில் தற்போது 32 லட்சம் ரூபாய் செலுத்தி இருக்கிறார் என்று வணிகவரித் துறை அதிகாரிகள் தரப்பில் இருந்து தகவல் கசிந்துள்ளது.