‘நெருங்கும் சட்டப்பேரவை தேர்தல்’ : நடிகர் விஜய் திடீர் ஆலோசனை!

 

‘நெருங்கும் சட்டப்பேரவை தேர்தல்’ :  நடிகர் விஜய் திடீர் ஆலோசனை!

சென்னை அருகே பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் ஈடுபட்டார்.

சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் மாணவரணி, இளைஞரணி, தொண்டரணியுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கொரோனா காலத்தில் வீட்டிலேயே இருந்த விஜய் ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

‘நெருங்கும் சட்டப்பேரவை தேர்தல்’ :  நடிகர் விஜய் திடீர் ஆலோசனை!

விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும் என அவரின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறிய நிலையில் ஆலோசனை நடந்து வருகிறது. திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, மதுரை தெற்கு, மதுரை வடக்கு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

‘நெருங்கும் சட்டப்பேரவை தேர்தல்’ :  நடிகர் விஜய் திடீர் ஆலோசனை!

அதேபோல் கன்னியாகுமரி ,கடலூர்,ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த நிலையில் மகாராஷ்டிரா விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
தனது மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் விரைவில் கள்ளக்குறிச்சி ,செங்கல்பட்டு உள்ளிட்ட பிற மாவட்ட நிர்வாகிகளையும் நடிகர் விஜய் சந்திக்கிறார் என்பது கூடுதல் தகவல்.