• April
    07
    Tuesday

Main Area

Main



சாதியை ஒழிக்க செம ஐடியா கொடுத்த விஜய் சேதுபதி: குவியும் பாராட்டுக்கள்! 

vijaysethupathi
vijaysethupathi

சென்னை : நடிகர் விஜய்சேதுபதி சாதியை ஒழிக்க ஐடியா கொடுத்ததால் அவருக்கு ரசிகர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி நடிகர் என்பதையும் தாண்டி சமூக பொறுப்புகளில் அதிகம் அக்கறை காட்டும் ஒரு மனிதர். தனது வாழக்கையில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறிய அவர், தற்போது தமிழ் திரை உலகில் ஒரு மிக பெரிய முக்கிய நடிகராக வளம் வந்துகொண்டுவருகிறார்.தற்போது  சீனு ராமசாமியின் மாமனிதன் படத்தின் படப்பிடிப்பு கேரளா ஆலப்புழா மாவட்டத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்நிலையில், கேரளா பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி ஒன்று அளித்துள்ளார், அதில் " சாதியை ஒழிக்க வேண்டும் என்றால் கல்வியில் முன்னேற்றமும், காதல் திருமணம் செய்வதும் தான் சிறந்த வழி என தெரிவித்தார்.பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் எந்தத் துறையில் இருந்தாலும்  அது தவறுதான் என்றும், அதே நேரத்தில்  பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் விஜய் சேதுபதி கூறினார்.

சபரிமலை விவகாரத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்முடிவு சரிதான் என்றும் நடிகர் விஜய்சேதுபதி குறிப்பிட்டுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.