நடிகர் வடிவேல் பாலாஜி மரணம்

 

நடிகர் வடிவேல் பாலாஜி மரணம்

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி( வயது42) சென்னையில் காலமானார். உடல்நலக்குறைவினால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

நடிகர் வடிவேல் பாலாஜி மரணம்

மதுரையைச்சேர்ந்தவர் பாலாஜி. நடிகர் வடிவேலுவைப்போலவே உடல்மொழியைக் கொண்டதால் வடிவேல் பாலாஜியாக அறியப்பட்டவர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ’கலக்கப்போவது யாரு’, ’அது இது எது’ நிகழ்ச்சிகளில் நடித்து புகழ்பெற்ற பாலாஜி, திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.

நடிகர் வடிவேல் பாலாஜி மரணம்

கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு கை,கால்கள் செயல் இழந்த நிலையில், சென்னை அமைந்தகரையில் உள்ள பில்ராத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் வடிவேல் பாலாஜி. 15 நாட்கள் சிகிச்சை எடுத்து வந்த நிலையில், தொடர்ந்து அங்கே மருத்துவ செலவு செய்ய முடியாத காரணத்தினால், அங்கிருந்து வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

நடிகர் வடிவேல் பாலாஜி மரணம்


அங்கேயேயும் தொடர்ந்து பணம்கட்டி சிகிச்சை பெற முடியாததால் ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கே கொரோனா நோயாளிகள் அதிகம் இருப்பதால் இன்று காலையில் அவர் அவசரமாக ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் திடீரென்று மரணம் அடைந்துவிட்டார்.

வடிவேல் பாலாஜி திருமணம் ஆனவர். அவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள்.

வடிவேல் பாலாஜியின் திடீர் மரணம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.