• April
    03
    Friday

Main Area

Main



துரத்தியடித்த ரஜினி...! அட்லி பற்றி அஜித் சொன்ன பஞ்ச்!

அஜித்
அஜித்

ரஜினி, முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ செய்வதற்கு முன்பாகவே அட்லி ஒன்லைன் சொல்லி ரஜினியை அசத்தியிருந்தார். அந்த ஒன்லைன் ரஜினிக்கு ரொம்ப பிடித்துப் போயிருந்த நேரத்தில் தான், அட்லியின் கதைத் திருட்டு விவகாரம் விஸ்வரூபமெடுத்து பத்திரிக்கைகளில் சந்தி சிரித்தது. எல்லா ஹிட் படங்களின் கலவையாக அட்லி செய்யும் தகிடுத்தனத்திற்கு பயந்து ரஜினி மெளனம் காத்து வந்தார். 

‘பிகில்’ படம் ஏகப்பட்ட சாதனைகளைச் செய்து வருகிறது என்று இணையம் முழுக்கவே தகவல்கள் கொட்டிக் கிடக்கிறது. விஜய்க்கு பேசப்பட்ட முழு தொகையும் கொடுக்கப்பட்டு விட்டது. படத்திற்கு அட்லி கோடிகளில் வாங்கிய சம்பளம் முழுதும் பைசல் செய்யப்பட்டு, மனைவியுடன் ஜாலி போட்டோசெஷன்ல கலந்துக்கிட்டு தீபாவளியைக் கொண்டாடினார். படம் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் பாவம். இத்தனைக்கும் இந்த இழப்பைத் தாங்கக் கூடிய நிறுவனம் தான் என்றாலும் இதிலிருந்து மீண்டு எழ ரெண்டு மூணு தீபாவளி தேவைப்படும் போலிருக்கிறது நிலவரம். 

atlee

இனி விஜய், அட்லியின் டைரக்‌ஷனில் நடிக்கிறதென்பது எல்லாம் வெறும் கனவாக மட்டும் தான் இருக்கும். ரஜினி வீட்டு கதவும் அடைக்கப்பட்டு விட்டது. அடுத்த ஸ்டாரான அஜித்துக்கு இப்போதே துண்டை விரித்து வைப்போம் என்று ஆரம்பித்து பிள்ளையார் சுழி போட்டது தான் அந்த வில்லங்கமான ட்வீட் என்கிறார்கள். தான் வாங்கும் கோடிக்கணக்கான சம்பளத்தில் மாதந்தோறும் சில லட்சங்களைச் செலவு செய்து, தன்னை ஒரு பெரிய இயக்குநராக காட்டிக் கொள்வதற்காக பத்திரிக்கைகளிலும், இணையதளங்களிலும் செய்திகளை பரப்புவதற்கு என்றே தனியாக ஒரு குழுவை வைத்திருக்கிறார் அட்லி.

இதையடுத்து தான் அஜித்தின் மக்கள் தொடர்பாளரையே தனக்கும் மக்கள் தொடர்பாளராக நியமித்திருப்பது என்று கனகச்சிதமாக காய் நகர்த்தி வருகிறார் அட்லி. ஷாருக்கானை வைத்து இந்தி படம் இயக்கப் போகிறார் என்று வந்த செய்திகள் எல்லாம் கூட டுபாக்கூர் செய்திகள் தானாம். இயக்குநர் ஷங்கரின் உதவியாளராக இருந்தப் போது படப்பிடிப்பில் ஷாருக்கான் பழக்கம். அதை வைத்து அட்லி டீம் கிளப்பி விட்ட செய்தி தான் அந்த இந்தி படம் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

ajith

இவை எல்லாவற்றையும் மெளனமாக பார்த்து வரும் அஜித்திடம், அட்லியுடன் இணைவீர்களா என்று அவரது நலம் விரும்பிகள் கேட்டதற்கு, உழைச்சு சம்பாதிக்கிற காசு தான் நிலைக்கும். அடுத்தவங்க உழைப்பைத் திருடி அதுல வர்ற ஹிட் எனக்கு வேண்டாம். என் படங்கள் சுமாரா போனாலே போதும்’ என்று பஞ்ச் வைத்து கிளம்பினாராம் தல!
மேன்மக்கள் மேன்மக்கள் தான்!

2018 TopTamilNews. All rights reserved.