நடிகர் சூர்யாவின் கருத்தை பெருந்தன்மையாக தவிர்த்துவிடலாம்!

 

நடிகர் சூர்யாவின் கருத்தை பெருந்தன்மையாக தவிர்த்துவிடலாம்!

நீட் தொடர்பான தனது எதிர்ப்பை கடுமையான விமர்சனங்களுடன் பதிவு செய்தி நடிகர் சூர்யா, உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாக கூறியிருந்தார். நடிகர் சூர்யாவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

நடிகர் சூர்யாவின் கருத்தை பெருந்தன்மையாக தவிர்த்துவிடலாம்!

அதில், “உயிருக்கு பயப்படும் நீதிமன்றம், மாணவர்களை தேர்வெழுத சொல்வதாக சூர்யாவின் கருத்து நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நேர்மை, சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளதுசூர்யாவின் கருத்து மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல்,தவறாக விமர்சிக்கும் வகையிலும் உள்ளது. இதுபோன்ற கருத்துக்கள் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது. எனவே சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிப்படுத்த வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

நடிகர் சூர்யாவின் கருத்தை பெருந்தன்மையாக தவிர்த்துவிடலாம்!

இந்நிலையல் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி சுதந்திரம், நடிகர் சூர்யாவின் கருத்தை பெருந்தன்மையாக தவிர்த்துவிடலாம். நீட்தேர்வு மீதான கோபத்தின் வெளிப்பாடாக சூர்யாவின் அறிக்கை உள்ளது. அதிகக் கூட்டம் மிகுந்த நீதிமன்ற நடைமுறைகளை ஒரு நாள் நடக்கும் நீட்தேர்வு நடைமுறையுடன் ஒப்பிட முடியாது” என்று அவர் கூறியுள்ளார்.