• October
    20
    Sunday

Main Area

Mainஅச்சச்சோ.. ஓடிடுங்க... நடிகர் சிம்புவும் அரசியலுக்கு வர்றாராம்!

சிம்பு
சிம்பு

தமிழக அரசியல் சமீபமாய் தறிகெட்டு போயிருப்பதற்கு நிறைய்ய... நிறைய்ய... உதாரணங்களைச் சொல்லலாம். காமராஜர், அண்ணா, எம்ஜிஆரை எல்லாம் விடுங்க... கட்டக் கடைசியா ஜெயலலிதாவும், கருணாநிதியும் இருந்தப்போ கூட மத்தியில் ஆள்கின்ற அரசுக்கு அது காங்கிரஸோ, பாஜகவோ தமிழகத்தின் மீது ஒரு மரியாதையும், பற்றும் இருந்தது. அவர்கள் எடுக்கும் சோப்ளாங்கியான திட்டங்களுக்கெல்லாம் தலையாட்டுகிற பொம்மையாக தமிழக அரசு இருக்காது என்கிற கணிப்பும் தமிழகத்தின் மேல் இருந்தது. தற்போது கம்பீரமாய் இருந்த தமிழக அரசு, எடுப்பார் கைப்பிள்ளையாக காட்சியளிப்பதாக பொதுமக்கள் கருதி வருகிறார்கள்.

karunanidhi and jayalaitha

ஜெயலலிதா இறந்து வருடங்கள் கடந்த நிலையிலும், ஜெயலலிதா மட்டும் இருந்திருந்தா நீட் வந்திருக்குமா, ஹைட்ரோ கார்ப்பன், ஸ்டெட்லைட் வந்திருக்குமா என்றெல்லாம் குரல்கள் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
இவ்வளவு ஏன்... கருணாநிதி மட்டும் இருந்திருந்தால், ஓபிஎஸ்,எடப்பாடி எல்லாம் இந்நேரம் ஆட்சியில் இருந்திருப்பாங்களா... அட அரசியல்ல தான் இருந்திருப்பாங்களா... என்று எதிர்கட்சியான திமுக வையும் மக்கள் விட்டுவிடவில்லை. அதற்கேற்றாற் போல அவர்கள் அறிவித்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை எல்லாம் புஸ்வானமாக்கி, வாபஸ் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
சரி விஷயத்துக்கு வருவோம்... உதயநிதி ஸ்டாலின் எல்லாம் தீவிர அரசியல்ல வர்றப்போ நான் வரக் கூடாதா என்று தாய்லாந்தில் மசாஜ் செய்துக் கொண்டிருக்கும் நள்ளிரவில் சிம்பு யோசிச்சிருப்பார் போல... சரி அதையும் தான் பார்த்துடுவோம்... நான் முன்வெச்ச காலை பின் வெச்சதில்லை... என்று நள்ளிரவு நேரத்திலும், சென்னையில் இருக்கிற தன் அடிபொடிகளுக்கு செய்தி அனுப்பி, ‘அண்ணன் ஒரு முக்கியமான விஷயத்தை நாளைக்கு அறிவிக்கப் போறேன்’ என்று மீடியாக்களுக்கு தகவல் அனுப்பி பீதியைக் கிளப்பி வை.. நாளைக்கு விடிஞ்சா நம்மளோட அரசியல் எண்ட்ரி பற்றி தான் பேச்சாக இருக்கணும் என்று கூறியிருக்கிறாராம்.

str

இருக்கும் ஒட்டு மொத்த மீடியாக்களும், அரண்டு போய் சிம்பு வட்டாரத்தில் விசாரித்தால், அண்ணன் அறிவிக்க ஆசையாவும், ஆர்வமாகவும் தான் இருந்தாரு... இப்போ தூங்கிக்கிட்டு இருக்காரு... எழுந்திரிச்சதும் அறிக்கையை அனுப்பி வைக்கிறோம்’ என்று தகவல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
டி.ஆர் காலத்து அரசியலை எல்லாம் பார்த்து பழகிய தமிழ் மக்கள், சிம்புவின் அரசியல் எண்ட்ரியையும் காணுகிற வாய்ப்பு வெகு தொலைவில் இல்லை என்கிறார்கள். தவிர, ஒரு பக்கம் உதயநிதி, இன்பா எல்லாம் அரசியல்ல பதவியோட வலம் வரும் போது, இன்னொரு பக்கம் ரஜினி வந்தால், தனுஷும் செல்வாக்கோடு அரசியல்ல வருவாரு.. அப்போ அரசியல் தான் என்னோட களம் என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறாராம் சிம்பு. 

str and seeman

சும்மாயிருந்த சிம்புவை, கொம்பு சீவி விட்டது சீமான் தான் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ஒரு கூட்டத்தில், தன் கதையில் நடிப்பதற்கு விஜய் எல்லாம் பயப்படுகிறார். எடப்பாடிக்கு எல்லாமா விஜய் பயப்படுவது. என் தம்பி சிம்பு பயப்படாமல் இருக்கிறான் பாரு என்று சீமான் உசுப்பேற்றிவிட, புது உற்சாகத்துல மிதக்குகிறாராம் சிம்பு.
ஆகையால்... மக்கழே... தாய்லாந்தில் இருந்து தாய் மாநிலத்தைக் காக்க சிம்பு ரிட்டர்ன்ஸ்...ஜாக்கிரதையா இருந்துக்கோங்க!

2018 TopTamilNews. All rights reserved.