கொரோனா சூழலை கருத்தில் கொண்டு நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்: சோனு சூட்

 

கொரோனா சூழலை கருத்தில் கொண்டு நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்: சோனு சூட்

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதோடு, சரியான போக்குவரத்து வசதிகளும் இல்லாததால் நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என நாடு முழுவதும் மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் இந்த தேர்வுகளை ஒத்திவைக்கக்கோரி உச்ச நீதிமன்றத்திலும் பொது நல வழக்கு தொடரப்பட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து விட்டது. இதனையடுத்து தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) மற்றும் கூட்டு நுழைவு தேர்வு (ஜே.இ.இ.) (மெயின்) தேர்வுகள் திட்டமிட்டப்படி நடத்தப்படும் என அறிவித்தது. இது மாணவர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நீட் உள்ளிட்ட தேர்வுகள் ஒத்திவைக்கப்படாததால் டிவிட்டரில், #ResignNishankPokhriyal(ராஜினாமா நிஷாங்க் பொக்ரியால்) என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர்.

கொரோனா சூழலை கருத்தில் கொண்டு நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும்: சோனு சூட்

இந்நிலையில் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு நீட் மற்றும் ஜே.இ.இ. தேர்வுகளை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என்றும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டுமே தவிர அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் நடிகர் சோனு சூட் வலியுறுத்தியுள்ளார்.