யூடியூப் சேனல் ஆரம்பிக்கிறார் நடிகர் சிம்பு

 

யூடியூப் சேனல் ஆரம்பிக்கிறார் நடிகர் சிம்பு

நடிகர் சிலம்பரசன் தன்னுடைய பெயரில் விரைவில் யூட்யூப் சேனல் தொடங்கவுள்ளார்.

யூடியூப் சேனல் ஆரம்பிக்கிறார் நடிகர் சிம்பு

நடிகர் சிம்புவுக்கு என்று தனிரசிகர் பட்டாளம் உண்டு. அவர் படத்தில் நடித்தாலும், நடிக்காவிட்டாலும் அவருக்கான ரசிகர் கூட்டம் எப்போதும் அவரை பின்தொடர்ந்தபடியே இருக்கும். ஆண்டிற்கு ஒருபடம் என்ற கணக்கில் கடந்த 2019 ஆண்டு வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு அவரின் எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. நீண்ட போராட்டத்திற்கு பிறகு மாநாடு படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வந்தார் சிம்பு. இருப்பினும் அதுவும் கொரோனா காலத்தில் தடைபட்டு போனது .

யூடியூப் சேனல் ஆரம்பிக்கிறார் நடிகர் சிம்பு

இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் தனது பெயரில் யூட்யூப் சேனல் ஒன்றை தொடங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ட்விட்டர், ஃபேஸ்புக்,இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களிலும் கணக்கு தொடங்கும் திட்டம் உள்ளதாகவும், சமூக வலைத்தள கணக்குகள் தொடக்கம் தொடர்பான அறிவிப்பை அக்டோபர் 22ல் வெளியிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் சிம்புவுக்கு என்று சமூகவலைதளங்களில் எந்த அதிகாரப்பூர்வமான கணக்கும் இதுவரை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.