முதலில் மற்றவங்களுக்கு அட்வைஸ் பன்னுவதை நிறுத்துங்க- நடிகர் சிம்பு

 

முதலில் மற்றவங்களுக்கு அட்வைஸ் பன்னுவதை நிறுத்துங்க- நடிகர் சிம்பு

சென்னையில் நடைபெற்ற ஈஸ்வரன் பட பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் சிலம்பரசன், “எல்லாருக்கும் நெகடிவிட்டி இருக்கு. அனைவரும் மற்றவர்களை பார்த்து போட்டி, பொறாமை படுகின்றனர். முதலில் மற்றவங்களுக்கு அட்வைஸ் பன்னுவதை நிறுத்துங்க. அனைவருக்கும் தனி தனி வாழ்க்கை இருக்கு. அந்த வாழ்க்கையை வாழுங்க. அடுத்தவர்கள் சொன்னதை கேட்காதீங்க.

திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க முயற்சிகள் எடுக்கப்படும் என்று கூறியுள்ள தமிழக அரசுக்கு நன்றி. முதலில் பிறருக்கு அறிவுரை கூறுவதை நிறுத்துங்கள். சமூக வலைதளங்களில் வரும் நெகடிவிட்டியை தவிருங்கள். இதுவரையான என் எல்லா பிரச்னைகளுக்கும் உள்ளுக்குள் இருந்த சில விசயங்கள்தான் காரணம். எல்லாவற்றையும் சரிசெய்தே உங்கள் முன் நிற்கிறேன்” எனக் கூறினார்.

முதலில் மற்றவங்களுக்கு அட்வைஸ் பன்னுவதை நிறுத்துங்க- நடிகர் சிம்பு

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ஈஸ்வரன். இப்படம் வரும் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடதக்கது.