ரஜினிக்கு நடிகர் செந்தில் வாழ்த்து!

 

ரஜினிக்கு நடிகர் செந்தில் வாழ்த்து!

வரும் சட்டமன்ற தேர்தலில் ஆன்மீக அரசியலை முன்னெடுக்கவுள்ள ரஜினிகாந்த், டிசம்பர் 31ல் அரசியல் கட்சி அறிவிப்பு என்றும் ஜனவரியில் அரசியல் கட்சி தொடக்கம் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து தனது கட்சியின் டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் மற்றும் திரு. தமிழருவி மணியன் அவர்கள் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக ரஜினிகாந்த் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ரஜினியில் அரசியல் பிரவேச அறிவிப்புக்கு திரையுலகினரும் அரசியல் கட்சி தலைவர்களும் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். ஒரு சிலர் அவரை கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர்.

ரஜினிக்கு நடிகர் செந்தில் வாழ்த்து!

இந்நிலையில் ரஜினியுடன் பல திரைப்படங்களில் இணைந்து நடித்த பழம்பெரும் காமெடி நடிகரான செந்தில் ரஜினிகாந்த்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி பற்றி அறிவித்ததை அடுத்து நடிகர் செந்தில் ரஜினியிடம் தொலைபேசியில் பேசியதாகவும் அப்போது அவர் வாழ்த்து தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.