பிரிவின் வலியை சொல்ல வார்த்தைகள் இல்லை… ஈடு செய்ய முடியாத இழப்பு – சரத்குமார்

 

பிரிவின் வலியை சொல்ல வார்த்தைகள் இல்லை… ஈடு செய்ய முடியாத இழப்பு – சரத்குமார்

நகைச்சுவை நடிகர் விவேக்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “அருமை நண்பரும் நன்மனிதரும் உயர்ந்த பண்பாளருமான மான பத்மஸ்ரீ டாக்டர்.விவேக் அவர்கள் திடீர் உடல் நலக்குறைவால் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டு வருவார் என தமிழகமே பிரார்த்தித்த நிலையில். இன்று அதிகாலை பிரியாவிடை அளித்து மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அன்பு சகோதரரின் இழப்பு தமிழினத்திற்கும் தமிழ் திரையுலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

பிரிவின் வலியை சொல்ல வார்த்தைகள் இல்லை… ஈடு செய்ய முடியாத இழப்பு – சரத்குமார்

1987 ஆம் ஆண்டில் மனதில் உறுதி வேண்டும் திரைப்படம் வாயிலாக தமிழக மக்களுக்கு அறிமுகமான நண்பர் விவேக் அவர்களுடன் நம்ம அண்ணாச்சி, தென்காசிப்பட்டினம், 1977 திரைப்படங்களில் இணைந்து பணியாற்றிய நாட்களை எண்ணிப் பார்க்கிறேன். பல பரிமாணங்களில் நடித்து சீர்திருத்த கருத்துக்களை சமூகத்தில் மக்களிடையே பரப்பிய நல்ல மனிதர். தனது சமூக சிந்தனையால் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வழிகாட்டியாக பல சமூக சேவைகளை செய்த அருமை நண்பர் விவேக் அவர்கள்.

பிரிவின் வலியை சொல்ல வார்த்தைகள் இல்லை… ஈடு செய்ய முடியாத இழப்பு – சரத்குமார்

சின்ன கலைவாணர் என அன்புடன் அழைக்கப்படும் அவர், கலாமின் கனவை நனவாக்குவற்காக தன் வாழ்நாளில் பல லட்சம் மரக்கன்றுகளை நட்டார் என்பதை அனைவரும் அறிவோம் உலக நாயகன் என்று அவரது ஆன்மா இயற்கையுடன் கலந்ததை தமிழகத்தில் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நண்பர் விவேக் இனி மீண்டு வர முடியாது என்றாலும் அவரது திரைப்படங்களால் சமூக சேவைகளில் சமூக சீர்திருத்த கருத்துக்களால் என்றும் மக்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் வசித்துக் கொண்டே இருப்பார்.

பிரிவின் வலியை சொல்ல வார்த்தைகள் இல்லை… ஈடு செய்ய முடியாத இழப்பு – சரத்குமார்

மாணவர்களும் இளைஞர்களும் அவரது அறிவுரைகளை ஏற்று அவர் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்றுவதே அவருக்கு செய்யும் இறுதி மரியாதையாக இருக்கும். நிலையில்லா உலகில் எதிர்பாராத விதமாக நேர்ந்த இந்த பிரிவின் வலியை வார்த்தைகளால் போக்கி விட முடியாது அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தமிழ் திரையுலகில் இருக்கும் தமிழ் மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.