“சவாலான மனிதரான உங்களுக்கு மேலும் வலிமை கிடைக்க வாழ்த்துகள் ” : மோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!

 

“சவாலான மனிதரான உங்களுக்கு  மேலும் வலிமை கிடைக்க வாழ்த்துகள் ” : மோடிக்கு ரஜினிகாந்த்  வாழ்த்து!

பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“சவாலான மனிதரான உங்களுக்கு  மேலும் வலிமை கிடைக்க வாழ்த்துகள் ” : மோடிக்கு ரஜினிகாந்த்  வாழ்த்து!

பிரதமர் மோடி தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மோடியின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மோடியின் சாதனைகள் தொடர பலரும் வாழ்த்தி வருகின்றனர். குறிப்பாக ராகுல் காந்தி, தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல் அரசியல் கட்சி தலைவர்கள் மோடிக்கு வாழ்த்து கூறியுள்ளனர்.

இந்நிலையில் நடிகரும் மோடியின் அபிமானியுமான நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அதில், “மதிப்பிற்குரிய மோடி அவர்களே, சவாலான இந்நேரத்தில் சவாலான மனிதரான உங்களுக்கு மேலும் வலிமை கிடைக்க வாழ்த்துகள்” என்று பதிவிட்டுள்ளார்.