நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து!

 

நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து!

தீபாவளி பண்டிகையையொட்டி நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் நடிகர் ரஜினிகாந்த்தை காண அவரது ரசிகர்கள் வருகை புரிந்தனர். சிறுவர்கள், பெரியவர்கள் என பலரும் ரஜினி புகைப்படம் அச்சடித்த டி- ஷர்ட்டுகளை அணிந்து வந்திருந்தனர். அத்துடன் அவர்கள் முகக்கவசத்துடன், சமூக இடைவெளியை கடைபிடித்து நின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து!

இந்நிலையில் தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். தனது இல்லம் முன்பு திரண்டிருந்த ரசிகர்களை பார்த்து கையசைத்து தீபாவளி வாழ்த்து கூறிய ரஜினியை கண்டு ரசிகர்கள் ஆரவாரத்துடன் ஒலியெழுப்பினர்.

பொங்கல் பண்டிகை, தீபாவளி, புத்தாண்டு என பண்டிகை நாட்களில் ரஜினி ரசிகர்களுக்கு வாழ்த்து கூறுவது வழக்கமான ஒன்று தான். இதனாலயே அவரது ரசிகர்கள் இது போன்ற திருநாட்களில் ரஜினி வீட்டின் முன்பு நின்று வாழ்த்து பெற்று செல்கின்றனர்.