நண்பர் விவேக் நலம்பெற வேண்டுகிறேன் – ரஜினி ட்வீட்’

 

நண்பர் விவேக் நலம்பெற வேண்டுகிறேன் – ரஜினி ட்வீட்’

நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டார். இந்நிலையில் இன்று காலை திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து மயங்கி விழுந்தார். அவரை மீட்ட உறவினர்கள், சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவரது இதயத்துடிப்பு குறைவாக இருந்தது. விவேக்கிற்கு எக்மோ கருவி உதவியுடன் ஐசியுவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக அவரது உதவியாளர் நிகில் முருகன் தெரிவித்தார்.

நண்பர் விவேக் நலம்பெற வேண்டுகிறேன் – ரஜினி ட்வீட்’

அனைவரையும் சிரிக்கவைத்து மகிழ்ந்த விவேக் விரைவில் நலம்பெற வேண்டுமென அவரது ரசிகர்களும் திரைபிரபலங்களும் பிரார்த்தனை செய்துவருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், “நண்பர் விவேக் அவர்கள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.