“என் அறிக்கை அல்ல ; ஆனால் அதில் வந்த செய்தி உண்மை தான்” : நடிகர் ரஜினிகாந்த்

 

“என் அறிக்கை அல்ல ; ஆனால் அதில் வந்த செய்தி உண்மை தான்” : நடிகர் ரஜினிகாந்த்

உடல்நலத்தை கருத்தில் கொண்டு தனது அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்குத் தெரிவிப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

“என் அறிக்கை அல்ல ; ஆனால் அதில் வந்த செய்தி உண்மை தான்” : நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் பெயரில் அறிக்கை ஒன்று சமீபத்தில் வெளிவந்தது. இதுகுறித்து ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில், “என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாக பரவிக்கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக்கிப் ரஜினி பெயரில் வெளியான அறிக்கையில், கொரோனா பிரச்சினையினால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவும் இயலவில்லை. மருத்துவர்களிடம் எனது அரசியல் பிரவேசத்தைப் பற்றி ஆலோசனை கேட்டேன். ‘உங்களுக்கு வயது 70. உங்களுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் மற்றவர்களைவிட உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருக்கும். அதனால் கொரோனா தொற்று உங்களை எளிதில் தாக்கக்கூடிய வாய்ப்பு மிக அதிகம். இந்த நேரத்தில் அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்’ என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்கள். எனவே அப்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ரசிகர்களும், மக்களும் என்னை என்ன முடிவு எடுக்க சொன்னாலும் அதனை நான் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்” என்பது போல அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது கவனிக்கத்தக்கது.