'இலையை கையில மறைக்கலாம்; ஆனால் மலைய மறைக்க முடியாது'...நடிகர் ராகவா லாரன்ஸ் ட்வீட்!

ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ்


இயக்குநர்  ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தர்பார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம்  ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்தாக தமிழகத்தில் கடந்த வாரம்  வெளியானது.

ttn

இதில் சுனில் ஷெட்டி, நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா, நிவேதா தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  சூப்பர் ஸ்டாரின் தர்பார் படத்திற்குக் கலவையான விமர்சனங்கள் பெற்ற  நிலையிலும் வசூலை வாரிக்குவித்துள்ளது. குறிப்பாகத்  தர்பார் வெளியான   4 நாட்களில் ரூ.150 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது டிவிட்டர் பக்கத்தில், 'நண்பர்கள் மற்றும் ரசிகர்களே, சிலர் தலைவர் படம் ஓடாது என நினைத்தார்கள். குறிப்பாக’ ஒருவர்’  ஏகப்பட்ட திட்டங்கள் போட்டு படத்தைப் பார்க்கவேண்டாம் என்று வாட்ஸ்அப்பில் தகவல் பரப்பினார். ஆனால்  இதையெல்லாம் தாண்டி  பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைத்துள்ளது. இலையை கையில மறைக்கலாம்; ஆனால் மலைய மறைக்க முடியாது. மலைடா அண்ணாமலை, அந்த ஆண்டவனே நம்ம பக்கம் ‘என்று பதிவிட்டுள்ளார்.  இதை கண்ட ரஜினி ரசிகர்கள் லாரன்ஸுக்கு ஆதரவாகக் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.