“பாஜக இல்லன்னா… அதிமுக என்ற ரயில் ஓடாது” – ராதாரவி அதிரடி!

 

“பாஜக இல்லன்னா… அதிமுக என்ற ரயில் ஓடாது” – ராதாரவி அதிரடி!

பாஜக இல்லை என்றால் அதிமுக இல்லை என பாஜகவை சேர்ந்தவரும் நடிகருமான ராதாரவி தெரிவித்தார்.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஆளும் அரசான அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. விநாயகர் சதுர்த்தி பிரச்னையில் ஆரம்பித்த சண்டை தற்போது வேல் யாத்திரை வரை தொடருகிறது. இருப்பினும் பாஜக – அதிமுக கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என பாஜக தலைவர் எல்.முருகனும் முதல்வர் பழனிசாமியும் கூறிவருகின்றனர். ஆனால், பாஜகவை சேர்ந்தவர்களும் அதிமுக அமைச்சர்களும் எலியும் பூனையுமாகவே இருந்து வருகின்றனர்.

“பாஜக இல்லன்னா… அதிமுக என்ற ரயில் ஓடாது” – ராதாரவி அதிரடி!

இந்த நிலையில் நாகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ராதாரவி, நடிகர்கள் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இருக்கலாம் என்றும் பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்காத அதிமுக அரசின் ரயில், பாஜக இல்லையெனில் ஓடாது என்றும் தமிழகத்தில் பாஜக கால் ஊன்றும் என்றும் கூறினார். மேலும், பாஜகவில் மட்டும் தான் கூட்டணி குறித்த பிரச்னை ஏதும் இல்லை என்றும் சட்டமன்ற தேர்தல் குறித்து எந்த கவலையும் இல்லை என்றும் தெரிவித்தார்.