Home அரசியல் "ஸ்டாலினுக்கு தெரிந்தது சம்சாரம்; முத்தக்காட்சியின் பெருமை இவருக்கு தான்" : ராதாரவி விமர்சனம்!!

“ஸ்டாலினுக்கு தெரிந்தது சம்சாரம்; முத்தக்காட்சியின் பெருமை இவருக்கு தான்” : ராதாரவி விமர்சனம்!!

கருணாநிதி ஒரு ஏமாற்றுக்காரர் என்று பாஜக ஆதரவாளர் நடிகர் ராதாரவி பரப்புரையில் விமர்சித்து பேசியுள்ளார்.

"ஸ்டாலினுக்கு தெரிந்தது சம்சாரம்; முத்தக்காட்சியின் பெருமை இவருக்கு தான்" : ராதாரவி விமர்சனம்!!
ராதாரவி

பாஜக ஆதரவாளரான நடிகர் ராதாரவி நேற்று புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயத்தை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “நான் ரெடி நீங்க ரெடியா என்று ஸ்டாலின் கேட்கிறார். ஏன் ஸ்டாலின் ரெடியாகும் போது தான் நம்மும் ரெடி ஆகவேண்டுமா? சமஸ்கிருதம் என்ற வார்த்தையை சொல்லவே ஸ்டாலினுக்கு தெரியாது. அவருக்கு தெரிந்தது சம்சாரம் தான் . பாஜகவில் சேர்ந்த பிறகுதான் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டுள்ளது.

 ராதாரவி

இந்தி கற்றுக் கொள்ளக்கூடாது என திமுக தான் கூறியது. ஆனால் திமுகவில் உள்ளவர்கள் அனைவரும் பேசுகிறார்கள். தூர்தர்ஷன் என்ற பெயரை மாற்றக்கோரி கருணாநிதி டிவியை உடைக்கும் போராட்டம் செய்தார். அப்போது நானும் அந்த போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஆனால் கருணாநிதி தூக்கி போட்ட டிவி உள்ளே எதுவுமே இல்லை .அந்த அளவுக்கு கருணாநிதி ஒரு ஏமாற்றுக்காரர்” என்றார்.

ராதா ரவி

தொடர்ந்து பேசிய அவர், “இப்போது பல கட்சிகள் வந்துவிட்டது. கமலஹாசன் கூட கட்சி ஆரம்பித்து விட்டார் . முத்தக்காட்சியை அறிமுகப்படுத்திய பெருமை கமலை தான் சேரும். பல தயாரிப்பாளர்களை நடக்க விட்ட கமல் ஹாசன் இன்று கோவை தெற்கு தொகுதியில் நடையோ நடை என்று நடந்து கொண்டிருக்கிறார் ” என்று கூறினார்

"ஸ்டாலினுக்கு தெரிந்தது சம்சாரம்; முத்தக்காட்சியின் பெருமை இவருக்கு தான்" : ராதாரவி விமர்சனம்!!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

சிவகார்த்திகேயன் பட நடிகர் பவுன்ராஜ் திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், ஆயிரக் கணக்கானோர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர். திரை பிரபலங்கள் பலரின் உயிரிழப்புகளும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நகைச்சுவை நடிகர்...

2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டால் மாஸ்க் அணிய வேண்டாமா?

கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் உலக மக்களை ஆட்டிப்படைக்கத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. தற்போது இரண்டாம் அலை பரவ தொடங்கியிருக்கிறது. கொரோனா தொற்றுக்கு ஆரம்பக்...

தாமதமாக வந்த எம்எல்ஏக்கள்… ‘ரூ.2,000 பெற’ 4 மணி நேரம் காத்துக் கிடந்த பொதுமக்கள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதை ஏற்கவில்லை. நடந்து...

எங்கள கேக்காம திருவிழா நடத்துறீங்களோ… பட்டியலின மக்களை காலில் விழவைத்த ஊர்மக்கள்!

சாதி மதம் இனம் கடந்து மக்கள் சகஜமாக ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழகி வரும் இக்காலகட்டத்தில் கூட, தமிழகத்தின் பல இடங்களில் இன்னமும் பட்டியலின மக்கள் அவமதிக்கப்படும் சம்பவங்கள் அரங்கேறி...
- Advertisment -
TopTamilNews