சிவகார்த்திகேயன் பட நடிகர் பவுன்ராஜ் திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்!

 

சிவகார்த்திகேயன் பட நடிகர் பவுன்ராஜ் திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், ஆயிரக் கணக்கானோர் கொரோனாவால் உயிரிழக்கின்றனர். திரை பிரபலங்கள் பலரின் உயிரிழப்புகளும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. நகைச்சுவை நடிகர் விவேக் மாரடைப்பால் உயிரிழந்ததைத் தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்த், நடிகர்கள் பாண்டு, நெல்லை சிவா, மாறன், ஜோக்கர் துளசி, குட்டி ரமேஷ் உள்ளிட்ட பலர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

சிவகார்த்திகேயன் பட நடிகர் பவுன்ராஜ் திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்!

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பல படங்களில் நடித்த நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் உயிரிழந்தது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மரணத்திற்கு இயக்குனர் பொன்ராம் இரங்கல் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பவுன்ராஜ் நடிகர் சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.