darbar
  • January
    29
    Wednesday

Main Area

Main



நடிகர் சாந்தனுவை தொடர்ந்து விஜய் தலைமையில் திருமணம் செய்யும் பிரபல நடிகர் மகன்!

விஜய்
விஜய்

சென்னை: நடிகர் விஜய் தலைமையில்  நடிகர் முரளியின் மகனுக்கு திருமணம் நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

vijay

மறைந்த பிரபல நடிகர் முரளிக்கு  அதர்வா, ஆகாஷ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் அதர்வா திரைப்பட நடிகராக உள்ளார்.  லயோலா கல்லூரியில் படித்த ஆகாஷுக்கு இயக்குநராக  விருப்பம்.

akash

இவர் கல்லூரியில்  படிக்கும் போது  நடிகர் விஜயின் நெருங்கிய  உறவினரும் தளபதி 64 படத்தின் தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோவின் மகள் சினேகாவை காதலித்து வந்துள்ளார். தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் இவர்கள் திருமணம் நடைபெறவுள்ளது. 

xavier

இந்நிலையில் நடிகர் விஜய்  இந்த திருமணத்தைத் தலைமை தாங்கி நடத்தவுள்ளாராம். தற்போது டெல்லியில் தளபதி 64 படத்தில் நடித்து வரும் விஜய் சென்னை திரும்பியதும் இவர்களின் நிச்சயதார்த்தமும், பின்னர் விரைவில் திருமணமும்  நடைபெறவுள்ளதாகக் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது. 

vijay

ஏற்கனவே தளபதி 64  படத்திலிருந்து சேவியர் பிரிட்டோ விலகியதாகவும் தற்போது அவருக்கு பதிலாக லலித் என்பவர் தயாரிக்க இருப்பதாகத் தகவல் வெளியானது. இருப்பினும்  இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

2018 TopTamilNews. All rights reserved.