குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடிகர் மம்முட்டிக்கு 2 ஆண்டுகள் சிறை

 

குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடிகர் மம்முட்டிக்கு 2 ஆண்டுகள் சிறை

குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடிகர் மம்முட்டிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் என்பதால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடிகர் மம்முட்டிக்கு 2 ஆண்டுகள் சிறை

நடிகர் மம்முட்டி கடந்த 3ஆம் தேதியன்று கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை நிகழ்ச்சியில் பங்கேற்றார். மூட்டு அறுவை சிகிச்சைக்கு உதவும் ரோபோக்கள் நிகழ்ச்சியை தொடங்கி வைப்பதற்காக அவர் அந்த மருத்துவமனைக்கு சென்று இருந்தார். அப்போது தான், தனது காலில் ஏற்பட்ட தசை நார் சிகிச்சையை செய்து கொள்ளாமல் 21 ஆண்டுகளாக அவதிப்பட்டு வருவதாக அவர் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அறுவை சிகிச்சை செய்தால் ஒருகால் காலின் நீளம் குறைந்து குட்டை ஆகிவிடும். அதனால் தன்னை கிண்டல் செய்வார்கள் என்பதற்காகவே 21 ஆண்டுகாலமாக அறுவைசிகிச்சை செய்து கொள்ளாமல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் நடிகர் மம்முட்டிக்கு 2 ஆண்டுகள் சிறை

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அவர் வெளியேறிய போது, ஏராளமான கூட்டத்தினர், ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். ஒரே இடத்தில் இத்தனை பேர் திரண்டது தனிமனித இடைவெளி இல்லாமல் போனது. பலர் மாஸ்க் அணியாமலும் இருந்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து கோழிக்கோடு எலத்தூர் காவல் நிலையத்தில் நடிகர் மம்முட்டி , மருத்துவமனை இயக்குனர், ஊழியர்கள் உள்ளிட்ட 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கேரள புற்றுநோய் சட்டம் 2021 பிரிவு 4 ,5 மற்றும் 6 இன் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. இதனால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.