முதல்வர் ஸ்டாலினை சந்தித்த சிரஞ்சீவி… இணையத்தை கலக்கும் போட்டோ!

 

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த சிரஞ்சீவி… இணையத்தை கலக்கும் போட்டோ!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்று கடந்த மே 7ம் தேதி திமுக ஆட்சி அமைத்தது. முதல்வராக மு.க.ஸ்டாலின் அரியணையில் அமர்ந்தார். 10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் உதய சூரியன் உதயமானதற்கு தமிழ்நாட்டை சேர்ந்தோர் மட்டுமல்லாது பிற நாடுகளை சேர்ந்தோரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

முதல்வர் ஸ்டாலினை சந்தித்த சிரஞ்சீவி… இணையத்தை கலக்கும் போட்டோ!

தமிழக மக்களுக்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை கொண்டு வந்து பதவியேற்ற இரண்டு மாதங்களிலேயே சிறந்த முதல்வர் என்ற பட்டத்தையும் பெற்றார். அதுமட்டுமல்லாமல், இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். திறம்பட ஆட்சி புரிந்து வரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அரசியல் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட நடிகர் சிரஞ்சீவி மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். அப்போது அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், முதல்வர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினும் இருக்கிறார்.