மாஸ்டர், பிகில் ஆகிய படங்களில் நடித்த பிரபல நடிகர் மாரடைப்பால் காலமானார்!

 

மாஸ்டர், பிகில் ஆகிய படங்களில் நடித்த பிரபல நடிகர் மாரடைப்பால் காலமானார்!

பிரபல டப்பிங் கலைஞரும் நடிகருமான அருண் அலெக்சாண்டர் மாரடைப்பால் காலமானார். இவர் மாநகரம், கோலமாவு கோகிலா, கைதி, பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

மாஸ்டர், பிகில் ஆகிய படங்களில் நடித்த பிரபல நடிகர் மாரடைப்பால் காலமானார்!

நடிகர் அருண் அலெக்ஸாண்டர் மாநகரம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பல முக்கிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர். தற்போது வெளியீட்டு தயாராகவுள்ள மாஸ்டர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 48 வயதான இவர், நடிகர் மட்டுமல்லாது டப்பிங் கலைஞராகவும் பல்வேறு திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

2020ஆம் ஆண்டு நிறைவுக்கு வரும் இந்த தருணத்திலும் சினிமா துறையினரை விட்டுவைக்க வில்லை. பரவை முனியம்மா, சேது, தவசி, சின்னத்திரை நடிகை சித்ரா, வடிவேல் பாலாஜி, சுஷாந்த் சிங் உள்ளிட்ட பிரபலமான நடிகர்கள் இந்த ஆண்டு தான் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடதக்கது.