அஜித்தின் ‘வலிமை’ வெளியீடு எப்போது? புதிய அப்டேட் இதோ!

 

அஜித்தின் ‘வலிமை’ வெளியீடு எப்போது?  புதிய அப்டேட் இதோ!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்தின் ‘வலிமை’ வெளியீடு எப்போது?  புதிய அப்டேட் இதோ!

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு நடிகர் அஜித் மீண்டும் ஹெச் வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனி கபூரே தயாரித்துள்ள நிலையில் தல- இன் 60 ஆவது படமான இந்த படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டுள்ளது. இதில் அஜித் இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்த நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அஜித்தின் பைக் ரேஸ் வீடியோ இணையத்தில் வெளியானது.

அஜித்தின் ‘வலிமை’ வெளியீடு எப்போது?  புதிய அப்டேட் இதோ!

இந்நிலையில் நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தின் வலிமை படப்பிடிப்பு இன்னும் 15 நாட்களில் முடிவடைய உள்ள நிலையில் ஏப்ரல் 29ஆம் தேதி படம் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் படத்தின் முக்கிய காட்சிகள் வெளிநாட்டில் படமாக்க இயக்குநர் திட்டமிட்டுள்ளதாகவும், கொரோனா காரணமாக எந்த நாட்டை தேர்வு செய்வது, அனுமதி எப்படி வாங்குவது உள்ளிட்ட கேள்விகள் எழுந்துள்ளதால் வலிமை படத்தின் வெளியீடு தள்ளிப் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், படத்தை ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியிட திட்டமிட்டிருப்பதாகவும் திரைத்துறை வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது.