‘வலிமை அப்டேட்’ கேட்கும் ரசிகர்கள்..அப்செட்டான அஜித் : பரபரப்பு அறிக்கை!

 

‘வலிமை அப்டேட்’ கேட்கும் ரசிகர்கள்..அப்செட்டான அஜித் : பரபரப்பு அறிக்கை!

வலிமை படத்தின் அப்டேட் கேட்கும் ரசிகர்கள், பொறுமையுடன் காத்திருக்க வேண்டுமென நடிகர் அஜித் திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், என் மீதும் என் படங்களின் மீதும் அபரிதமான அன்பு கொண்டு இருக்கும் எதையும் எதிர்பாராத அன்பு செலுத்தும் என் உண்மையான ரசிகர்களுக்கும் மக்களுக்கும் என் மனமார்ந்த வணக்கம். கடந்த சில நாட்களாக என் ரசிகர்கள் என்ற பெயரில் நான் நடித்து இருக்கும் வலிமை சம்பந்தப்பட்ட அப்டேட் கேட்டு அரசு, அரசியல், விளையாட்டு மற்றும் பல்வேறு இடங்களில் சிலர் செய்து வரும் செயல்கள் என்னை வருத்தமுறச் செய்கிறது.

‘வலிமை அப்டேட்’ கேட்கும் ரசிகர்கள்..அப்செட்டான அஜித் : பரபரப்பு அறிக்கை!

முன்னரே அறிவித்த படி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதற்கான காலத்தை நேரத்தை நான் தயாரிப்பாளருடன் ஒருங்கிணைந்து நிர்ணயம் செய்வேன். அதுவரை பொறுமையுடன் காத்திருக்கவும். உங்களுக்கு சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே, எனக்கு சினிமா ஒரு தொழில். நான் எடுக்கும் முடிவுகள் என் தொழில் மற்றும் சமூக நலன் சார்ந்தவை. நம் செயல்களே சமூகத்தில் நம்மீது உள்ள மரியாதையை கூட்டும்.

‘வலிமை அப்டேட்’ கேட்கும் ரசிகர்கள்..அப்செட்டான அஜித் : பரபரப்பு அறிக்கை!

இதை மனதில் கொண்டு ரசிகர்கள் பொது வெளியிலும், சமூக வலைத்தளங்களிலும் கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். என் மேல் உண்மையான அன்பு கொண்டவர்கள் இதை உணர்ந்து செயல்படுவார்கள் என நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘வலிமை அப்டேட்’ கேட்கும் ரசிகர்கள்..அப்செட்டான அஜித் : பரபரப்பு அறிக்கை!

வலிமை படத்தின் அறிவிப்பு வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இதுவரை அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கூட வெளியாததால் ஏக்கமடைந்திருக்கும் ரசிகர்கள் பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, கிரிக்கெட் வீரர் மொயின் அலி உள்ளிட்ட பலரிடம் வலிமை அப்டேட் குறித்து கேட்டு வருகிறார்கள். இதனால், அப்செட்டான நடிகர் அஜித் இந்த அறிக்கையை தற்போது வெளியிட்டிருக்கிறார்.

வலிமை ஃபர்ஸ்ட் லுக்கை சிறப்பாக விரைவில் வெளியிட பணியாற்றி வருகிறோம்.. பொறுத்துக்கொள்ளுங்கள்.. என போனி கபூர் இன்று காலை பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.