கடுப்பான நடிகர் அஜித்; ரசிகரின் செல்போனை பறித்ததால் பரபரப்பு!! – வைரல் வீடியோ

 

கடுப்பான நடிகர் அஜித்; ரசிகரின் செல்போனை பறித்ததால் பரபரப்பு!! – வைரல் வீடியோ

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.புதுச்சேரி கேரளா தமிழகம் என ஆகிய மூன்று மாநிலங்களிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே ஆர்வத்துடன் பொது மக்கள் வாக்களித்து வருகின்றனர். அதேபோல் அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் வரிசையில் நின்று தங்கள் வாக்கினை செலுத்தி வருகிறார்கள்.

கடுப்பான நடிகர் அஜித்; ரசிகரின் செல்போனை பறித்ததால் பரபரப்பு!! – வைரல் வீடியோ

அந்தவகையில் நடிகர் அஜித் திருவான்மியூர் மாநகராட்சி பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வருகை தந்தார். வாக்குப்பதிவு தொடங்கும் முன்னே வாக்குச்சாவடிக்கு மனைவியுடன் வந்து அவர் வரிசையில் நின்று வாக்களிக்க காத்திருந்தார்.

கடுப்பான நடிகர் அஜித்; ரசிகரின் செல்போனை பறித்ததால் பரபரப்பு!! – வைரல் வீடியோ

அப்போது அஜித்தை கண்டு ரசிகர்கள் பெருமளவில் அவரை சூழ்ந்து கொண்டனர் . இதனால் பாதுகாப்பு போலீசார் அவரை பத்திரமாக வாக்குச் சாவடிக்கு அழைத்துச் சென்றனர்.அப்போது ரசிகர் ஒருவர் அஜித் உடன் செல்பி எடுக்க முயன்ற போது கடுப்பான அஜித் கோபமாக அவரின் செல்போனை பறித்தார்.

அத்துடன் அங்கிருந்த ரசிகர்களைப் பார்த்து இங்கிருந்து கிளம்புங்கள் என்று சைகையால் சொல்ல ரசிகர்கள் கூட்டம் கலைந்தது. இதையடுத்து மனைவியுடன் தனது வாக்கை செலுத்திய அஜீத் போலீஸ் பாதுகாப்புடன் காரில் ஏறி சென்றார். கொரோனா காலத்தில் தன்னை காண கூட்டம் கூடிய நிலையில் ரசிகர்களை வெளியே செல்லுமாறு அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.