உடலின் வண்ணம் தீட்டிய வழக்கு… ஜாமீன் கோரி உயர்நீதிமன்றம் நாடிய சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா!

உடலின் வண்ணம் தீட்டிய வழக்கு… ஜாமீன் கோரி உயர்நீதிமன்றம் நாடிய சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா!

சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா இன்று ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளார். தனது அரை நிர்வாண உடலில் குழந்தைகளை வைத்து வண்ணம் தீட்டி அந்த விடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதற்காக அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அவர் தண்டனைக்குரிய எந்தவொரு குற்றமும் அல்லது ஜாமினில் வெளிவரமுடியாததோ இல்லை என ரெஹானா தரப்பில் கூறப்பட்டுள்ளது. உடல் பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர் ரெஹானா பாத்திமா. மனித உடல் மற்றும் உடல் பாகங்கள் குறித்த விவாதங்கள் வெளிப்படையாக இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

உடலின் வண்ணம் தீட்டிய வழக்கு… ஜாமீன் கோரி உயர்நீதிமன்றம் நாடிய சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா!

குழந்தைகளைப் பொறுத்தவரை, அவர்களுக்கு பாலியல் கல்வி வழங்கப்பட வேண்டும், மேலும் உடல் மற்றும் அதன் பாகங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், மேலும் பெண் உடல் ஒரு பாலியல் கருவியாக மட்டும் பார்க்கப்படுவதை விட முற்றிலும் வேறுபட்ட விதத்தில் பார்க்க அவர்களுக்கு உதவுகிறது, என்றும் அவர் கூறியுள்ளார்.

கொச்சியில் உள்ள அவரது வீட்டில் தேடுதல் நடத்தப்பட்டது. பின்னர் மறுநாள் அவரது மொபைல் போன் மற்றும் மடிக்கணினி ஆகியவை வீடியோ தொடர்பாக போலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து ரெஹானா உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு கோரிக்கை வைத்துள்ளார்.

உடலின் வண்ணம் தீட்டிய வழக்கு… ஜாமீன் கோரி உயர்நீதிமன்றம் நாடிய சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா!

“உடல் மற்றும் அரசியல்” என்ற தலைப்பில் வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்காக அவருக்கு எதிராக கேரள காவல்துறையின் சைபர் பிரிவான சைபர்டோம் தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் கொச்சி நகர போலீஸ் அவர்மீது வழக்கு பதிவு செய்தனர். பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் ரெஹானா மீது வழக்கு பதிவு செய்யுமாறு ஆணையம் காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது.

உடலின் வண்ணம் தீட்டிய வழக்கு… ஜாமீன் கோரி உயர்நீதிமன்றம் நாடிய சமூக ஆர்வலர் ரெஹானா பாத்திமா!

பெண்கள் சபரிமலைக்கு செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போது ரெஹானா பல்வேறு எதிர்ப்புகளை மீறி கோவிலுக்குள் நுழைய முயற்சி மேற்கொண்டார். இதனால் பலரது எதிர்ப்புக்கு ஆளானார். பின்னர் இந்த ஆண்டு மே மாதம் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தால் “சமூக வலைதள பதிவுகள் மூலம் வேண்டுமென்றே பக்தர்களின் மத உணர்வுகளை மீறுகிறார்” என்று குற்றம் சாட்டப்பட்டு வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.