மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை – சுகாதாரச் செயலாளர் எச்சரிக்கை

 

மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை – சுகாதாரச் செயலாளர் எச்சரிக்கை

தமிழிகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவிக் கொண்டே வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 1,843 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,504 ஆக உயர்ந்தது. சென்னையில் மட்டும் நேற்று 1,257 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 33,244 ஆக அதிகரித்துள்ளது. மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், சென்னையில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள மாஸ்க் அணியுமாறும், சமூக விலகலை கடைபிடிக்குமாறும் அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை – சுகாதாரச் செயலாளர் எச்சரிக்கை

இந்நிலையில் மக்கள் மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மக்கள் முகக்கவசத்தை உயிர்க்கவசமாக நினைக்க வேண்டும் என்றும் மாஸ்க் அணியாமல் மக்கள் எங்கும் செல்லக் கூடாது என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.