“சசிகலா வருகையை முன்னிட்டு பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” : மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

“சசிகலா வருகையை முன்னிட்டு  பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” : மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சசிகலாவை வரவேற்று பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

“சசிகலா வருகையை முன்னிட்டு  பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” : மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையாகியுள்ள சசிகலா நாளை சென்னை வருகிறார். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் சசிகலா வருகையையொட்டி அமமுக சார்பில் அவரை வவேற்க அனுமதி கேட்கப்பட்ட நிலையில் காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து தெரிவித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ” தியாகத்தலைவி சின்னம்மா அவர்களை வரவேற்க காவல்துறை அனுமதி . பதற்றத்திலுள்ள சிலர் சதி செய்து புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மைத் தொண்டர்கள் மீது பழி போட அனுமதிக்கக்கூடாது! எல்லா இடங்களிலும் கழக உடன்பிறப்புகள் கவனமுடன் வரவேற்பு ஏற்பாடுகளைச் செய்திட அன்பு வேண்டுகோள்! ” என்று கூறியிருந்தார்.

“சசிகலா வருகையை முன்னிட்டு  பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” : மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

ஏற்கனவே தமிழகத்தில் கலவரம் செய்ய தினகரன், சசிகலா முடிவு செய்துள்ளதாக அமைச்சர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் தமிழகத்தில் கலவரம் ஏற்பட்டால் அதற்கும் அதிமுகவும் எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளனர்.

“சசிகலா வருகையை முன்னிட்டு  பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்” : மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்

இந்நிலையில் சசிகலா வருகையை முன்னிட்டு அனுமதியின்றி அரசியல் கட்சிகள் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பேனர்களால் ஏற்கனவே பல விபத்துகளும், உயிர்களும் பலியாகியுள்ள நிலையில் அனுமதியின்றி பேனர் வைக்க கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.தொடர்ந்து பேசிய அவர், மெரினா கடற்கரை கடைகள் ஒதுக்கீடு விவகாரத்தில் எந்த முறைகேடும் இல்லை என்றும் தெரிவித்தார்.