‘வெங்காயங்களை ரேஷன் கடையில் விற்க நடவடிக்கை’ – அமைச்சர் செல்லூர் ராஜு

 

‘வெங்காயங்களை ரேஷன் கடையில் விற்க நடவடிக்கை’ – அமைச்சர் செல்லூர் ராஜு

விலை உயர்வால், வெங்காயங்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் பண்ணை பசுமைக் கடையில் குறைந்த விலைக்கு வெங்காயம் விற்பனை செய்யப்படுவதை அமைச்சர் செல்லூர் ராஜு தொடக்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ‘தமிழகத்திற்கு ஆண்டுக்கு 10 லட்சம் மெட்ரிக் டன் வெங்காயம் தேவை. சின்ன வெங்காயம் தமிழகத்திலேயே பயிரிடப்படுகிறது. நாட்டிலேயே அதிகளவில் மகாராஷ்டிரா,ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் தான் பெரிய வெங்காயம் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.’ என தெரிவித்தார்.

‘வெங்காயங்களை ரேஷன் கடையில் விற்க நடவடிக்கை’ – அமைச்சர் செல்லூர் ராஜு

தொடர்ந்து, ஜெயலலிதா அவர்கள் இருந்த போது விலை நிலைப்படுத்தல் நிதியத்தை ஏற்படுத்தினார். அதில் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டதன் படி, அந்த பணம் விலை உயர்வின் போது உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது வெங்காயத்துக்கு தட்டுப்பாடு இருப்பதால் மக்கள் யாரும் வெங்காயங்களை பதுக்கக்கூடாது. உத்தரவை மீறி பதுக்கினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மேலும், 150 டன்னுக்கு மேல் வெங்காயம் கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாகவும் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.