இம்மாதத்திற்கு 71 லட்சம் தடுப்பூசிகளை பெற நடவடிக்கை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

 

இம்மாதத்திற்கு 71 லட்சம் தடுப்பூசிகளை பெற நடவடிக்கை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

ஜூலை மாதத்திற்கான தொகுப்பில் இருந்து 10 லட்சம் தடுப்பூசிகள் வந்துள்ளது; எஞ்சியுள்ள தடுப்பூசிகளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

திருவண்ணாமலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவத் துறை அமைச்சர் மா சுப்ரமணியம், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இரண்டு நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான சிகிச்சை மையம் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை தற்போது 9 மடங்கு குறைந்துள்ளது. பாதிப்பு குறைந்தாலும் பரிசோதனை செய்யப்படும் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை என்று கூறினார்.

இம்மாதத்திற்கு 71 லட்சம் தடுப்பூசிகளை பெற நடவடிக்கை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தொடர்ந்து பேசிய அவர், ஜூலை மதத்திற்கான தொகுப்பிலிருந்து 71 ஒரு லட்சம் தடுப்பூசி வரவேண்டும். 10 லட்சம் தற்போது வந்துள்ளது. மீதமுள்ள தடுப்பூசிகளையும் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவது வலை வந்தால் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். முதல்வர் ஸ்டாலின் ஏற்படுத்திய மக்கள் இயக்கத்தின் மூலமாக இரண்டாவது அலை கட்டுப்படுத்தப்பட்டது. 95 சதவீத மக்கள் முதல்வரின் அறிவுரைகளை கடைப்பிடிக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.