“கடன் தவணையை செலுத்த வற்புறுத்தினால் நடவடிக்கை”… கடன் நிறுவனங்களுக்கு, திருச்சி ஆட்சியர் எச்சரிக்கை!

 

“கடன் தவணையை செலுத்த வற்புறுத்தினால் நடவடிக்கை”… கடன் நிறுவனங்களுக்கு, திருச்சி ஆட்சியர் எச்சரிக்கை!

திருச்சி

கடன் தவணை செலுத்தக் கோரி பொதுமக்களை வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் தனியார் வங்கிகள், கடன் நிறுவனங்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று ஆட்சியர் சிவராசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், “திருச்சி மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், மாவட்டத்தில் உள்ள தனியார் வங்கிகள், நுண் நிதி நிறுவனங்கள் கடன் பாக்கியை செலுத்தக் கோரி வரம்பு மீறி செயல்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன”.

“கடன் தவணையை செலுத்த வற்புறுத்தினால் நடவடிக்கை”… கடன் நிறுவனங்களுக்கு, திருச்சி ஆட்சியர் எச்சரிக்கை!

“மேலும், லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் கிராமபுற மக்கள் மீது கடன் வழங்கிய நிறுவனங்கள் அதிகப்படியான அழுத்தம் கொடுப்பதாக கூறப்படுகிறது. தவணை தொகை செலுத்தினாலும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும், தவணை செலுத்தும் கால அட்டவணையை மாற்றியமைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது”.

“மேலும், கடன் வசூலில் ஈடுபடுபவர்கள் அதிக இடங்களுக்கு செல்வதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, எவ்வித புகாரும் வராமல் தனியார் வங்கிகளும், கடன் நிறுவனங்களும் செயல்பட வேண்டும். மீறி செயல்பாடுகளில் ஈடுபட்டால் பணியாளர்கள், நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என தெரிவித்திருந்தார்