ட்ரம்ப் தோல்வியால் டிக்டாக் நிறுவனம் செய்த அதிரடி!

 

ட்ரம்ப் தோல்வியால் டிக்டாக் நிறுவனம் செய்த அதிரடி!

அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டார்கள். நான்கைந்து நாட்களாக முடிவில் இழுபறி நீடித்தது. இறுதியாக, பலரும் கணித்த ஜோ பைடன் அதிபராகும் மெஜாரிட்டியைப் பெற்றார். ஜனவரி மாத இறுதியில் அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்க இருக்கிறார் ஜோ பைடன்.

ட்ரம்பின் தோல்வியைப் பயன்படுத்தி டிக்டாக் நிறுவனம் செய்த வேலையைப் பார்க்கும்முன், ஏன் டிக்டாக் அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது என்பதைப் பார்ப்போம்.

ட்ரம்ப் தோல்வியால் டிக்டாக் நிறுவனம் செய்த அதிரடி!

டிக்டாக் நிறுவனம், தந்து வாடிக்கையாளர்களின் சொந்த விவரங்களை சீனா நாட்டில் உள்ள ஒரு முக்கிய நிறுவனத்திற்கு தருவதாகக் கூறப்பட்டது. ஆனால், அமெரிக்காவின் குற்றச்சாட்டை கடுமையாக மறுத்தது பைட் டான்ஸ் நிறுவனம். ஆயினும் செப்டம்பர் 20-ம் தேதியோடு அமெரிக்காவில் டிக்டாக் தடை எனும் செய்தி பரவியது. டிக்டாக் தடைக்கு எதிராக அந்த நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது.

டிக்டாக்கை தடை செய்ய வைப்பதில் ட்ரம்ப் மிகுந்த ஆர்வம் காட்டினார். அதனால், அவர் தற்போது அதிகாரம் இழந்திருக்கும் நேரம் என்பதால், அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்யப்பட்ட விவகாரத்தில் அமெரிக்காவின் முதன்மை நீதிமன்றம் தலையிட்டு எங்களின் கருத்துகளின் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும்’ என புது டுவிஸ்ட் அடித்துள்ளது.

ட்ரம்ப் தோல்வியால் டிக்டாக் நிறுவனம் செய்த அதிரடி!

டிக்டாக் நிறுவனம் இதைத் தொடங்கி வைத்திருக்கிறது. ட்ரம்பால் பாதிக்கப்பட்டதாக நினைக்கும் நிறுவனங்கள் இனி ஒவ்வொருவராக இப்படி நீதிமன்றத்தை நாடுவார்கள் என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.