போலி இ-பாஸ் மூலம் வாகனங்கள் வந்தால் கடும் நடவடிக்கை – தேனி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை!

 

போலி இ-பாஸ் மூலம் வாகனங்கள் வந்தால் கடும் நடவடிக்கை – தேனி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை!

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருந்தாலும், சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக கொரோனா வைரஸ் குறைவாக இருக்கும் மாவட்டங்களில் மக்கள் இ-பாஸ் இல்லாமல் செல்லலாம் என்றும் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் இ-பாஸ் கட்டாயமாக தேவை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல மற்ற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களும் இ-பாஸ் பெற்றுக் கொண்டு தான் வர வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி தேனி மாவட்ட எல்லை தேவதானப்பட்டியில், மும்பை தாராவியில் இருந்து இரண்டு ஆம்னி பேருந்துகள் வந்துள்ளன.

போலி இ-பாஸ் மூலம் வாகனங்கள் வந்தால் கடும் நடவடிக்கை – தேனி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை!

அப்போது அந்த பேருந்துகளில் பரிசோதனை செய்த போலீசார், அந்த பாஸ் போலியானது என்பதை உறுதி செய்துள்ளனர். இதனையடுத்து 2 பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மதுரையை சேர்ந் 2 பேர் போலியான இ-பாஸ் தயாரித்து கொடுத்தது தெரிய வந்துள்ளது. அதனால் அந்த 2 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இது குறித்து பேசிய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி, வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தீவிர கண்காணிப்புக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.போலி பாஸ் மூலம் வாகனங்கள் வருவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுத்து, வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.