அமைச்சரவையிலிருந்து 3 அமைச்சர்களை திடீரென கழற்றி விட்ட மணிப்பூர் முதல்வர்…

 

அமைச்சரவையிலிருந்து 3 அமைச்சர்களை திடீரென கழற்றி விட்ட மணிப்பூர் முதல்வர்…

மணிப்பூர் அமைச்சரவையிலிருந்து 3 அமைச்சர்களை நீக்கும் முதல்வர் பைரன் சிங்கின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டதாக அம்மாநில கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் தற்போது முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பைரன் சிங் தலைமையிலான மாநில அமைச்சரவையில் இடம்பெற்று இருந்த 3 அமைச்சர்கள் திடீரென அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள் நீக்கப்பட்ட விவகாரம் மணிப்பூரில் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சரவையிலிருந்து 3 அமைச்சர்களை திடீரென கழற்றி விட்ட மணிப்பூர் முதல்வர்…

வேளாண், கால்நடை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் வி.ஹங்கலியன், சமூகநலன் மற்றும் ஒத்துழைப்பு துறை அமைச்சர் நெம்ச்சா கிப்கென் மற்றம் கல்வி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சர் ராதேஷ்யம் சிங் ஆகியோரை மணிப்பூர் அமைச்சரவையிலிருந்து நீக்கும்படி கடந்த சில தினங்களுக்கு முன் கவர்னர் நஜ்மா ஹெப்துல்லாவுக்கு முதல்வர் பைரன் சிங் பரிந்துரை செய்து இருந்தார்.

அமைச்சரவையிலிருந்து 3 அமைச்சர்களை திடீரென கழற்றி விட்ட மணிப்பூர் முதல்வர்…

இதனையடுத்து அமைச்சரவையிலிருந்து 3 அமைச்சர்களை நீக்கும் உங்கள் பரிந்துரையை ஏற்றுக்கொண்டதாக என முதல்வர் பைரன் சிங்குக்கு எழுதிய கடிதத்தில் கவர்னர் தெரிவித்தார். இந்த மாத தொடக்கத்தில் பா.ஜ.க.வின் தேசிய தலைமையோடு அமைச்சரவையில் மாற்றங்கள் செய்வது தொடர்பாக பைரன் சிங் ஆலோசனை செய்ததாக தகவல். அதனை தொடர்ந்துதான் தற்போது 3 அமைச்சர்கள் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது பைரன் சிங் தனது அமைச்சரவையில் சில அமைச்சர்களை சேர்க்க வாய்ப்புள்ளதாக என செய்தி வெளியாகியுள்ளது.