மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

 

மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் வசூலிப்பது தொடர்பான மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.

தமிழக சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 3 நாட்கள் மட்டுமே நடத்தப்பட உள்ள கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடைகிறது. நேற்று மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பிறகு அவை ஒத்திவைக்கப்பட்டதால், இன்று பல விவாதங்கள் எழுந்தன. குறிப்பாக நீட் தேர்வு தொடர்பாக அதிமுக அரசுக்கும் திமுகவுக்கும் இடையே அனல் பறக்க விவாதிகப்பட்டது.

மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

இதனைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பால் தமிழக அரசின் செலவீனங்கள் குறித்த அறிக்கையை துணை முதல்வர் ஓபிஎஸ் தாக்கல் செய்தார். இதுவரை கொரோனாவுக்காக தமிழக அரசு ரூ.7167.97 கோடி செலவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்புக்கான 7.5% உள்ஒதுக்கீடு சட்ட மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.

இந்த நிலையில் சென்னையில் மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிப்பது தொடர்பாக சட்டமசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியுள்ளது. தனிமனித இடைவெளியை பின்பற்றாத நபர்களுக்கும் இந்த மசோதா மூலம் அபராதம் விதிக்க முடியும். கடந்த 2 நாட்களில் மட்டுமே சென்னையில் கொரோனா விதிகளை பின்பற்றாதவர்களிடம் இருந்து ரூ.1.93 கோடி வசூலானது நினைவு கூரத்தக்கது.