• February
    29
    Saturday

Main Area

Main



அதிர்வை ஏற்படுத்திய ஆசிட் பெண் திரைப்பட டிரெய்லர்!

ஆசிட் பெண்
ஆசிட் பெண்

2015ம் ஆண்டு, காதலை ஏற்க மறுத்த காரணத்தால் ஆசிட் வீச்சுக்கு ஆளானவர் லட்சுமி அகர்வால். அப்போது அவருக்கு வயது வெறும் 15 தான். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

lakshmi deepa

தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்த லட்சுமி அர்வால் அதன் பிறகு பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார். அழகான முகத்தை பறிகொடுத்துவிட்டு சமூகத்தின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளான அவர், சான்வ் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பை ஏற்படுத்தி ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பாடுபட்டு வருகிறார். 
இந்த நிலையில், லட்சுமி அகர்வால் வாழ்க்கையை மையமாக வைத்து படம் ஒன்று தயாராகி வருகிறது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் வேடத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார். ஃபாக்ஸ் ஸ்டாருடன் இணைந்து தீபிகா படுகோனே தயாரித்துள்ள இந்த படத்துக்கு சப்பாக் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை மேக்னா குல்சார் என்ற இயக்குநர் இந்த படத்தை இயக்கியுள்ளார். 
இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இரண்டே நாளில் சுமார் 1.98 கோடி பேர் இந்த டிரெய்லரை பார்த்துள்ளனர். இந்த படம் அடுத்த மாதம் (ஜனவரி) 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

2018 TopTamilNews. All rights reserved.