‘நிவர் புயல் கேப்பில் 38 சவரன் நகை கொள்ளை’ – ஒரே நாளில் திருடர்களை பிடித்து அசத்திய போலீசார்!

‘நிவர் புயல் கேப்பில்  38 சவரன் நகை கொள்ளை’ – ஒரே நாளில் திருடர்களை பிடித்து அசத்திய போலீசார்!

சென்னையை சேர்ந்த ஒரு குடும்பம் நிவர் புயலால் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த வேளையில், 38 சவரன் நகையை கொள்ளையடித்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அசோக் நகர் பகுதியில் வசித்து வரும் பார்த்தசாரதி (65) என்பவர் கடந்த 24ம் தேதி தொடர் கனமழையால், தனது குடும்பத்தினருடன் சாஸ்திரி நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருக்கிறார். இதனை அறிந்து கொள்ளையர்கள் அன்றே அவர் வீட்டில், கைவரிசையை காட்டியுள்ளனர். நேற்று காலை வீடு திரும்பிய பார்த்தசாரதி, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 38 சவரன் நகை மற்றும் ரூ.2 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

‘நிவர் புயல் கேப்பில்  38 சவரன் நகை கொள்ளை’ – ஒரே நாளில் திருடர்களை பிடித்து அசத்திய போலீசார்!

அந்த புகாரின் பேரில் கொள்ளையர்களை கண்டுபிடிக்க களமிறங்கிய போலீசார், சிசிடிவி காட்சிகள் இல்லாததால் அப்பகுதியை சேர்ந்த குற்றவாளிகள் சிலரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பார்த்தசாரதியின் குடும்பம் உறவினர் வீட்டுக்கு செல்வதை அறிந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் தான், இந்த கொள்ளையை செய்திருக்க வேண்டும் என்ற போலீசாரின் கணிப்பு மெய்யானது.

‘நிவர் புயல் கேப்பில்  38 சவரன் நகை கொள்ளை’ – ஒரே நாளில் திருடர்களை பிடித்து அசத்திய போலீசார்!

இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்த ராஜேஷ் (18), பிரகாஷ்(20), விக்கி ஆகிய குற்றவாளிகளை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து நகையை கைப்பற்றி பார்த்தசாரதியிடம் ஒப்படைத்துள்ளனர். ஆனால், கொள்ளையடித்த பணத்தை அவர்கள் மூன்று பேரும் செலவு செய்து விட்டு மீதம் ரூ.22 ஆயிரம் மட்டுமே கொடுத்ததால், அந்த பணத்தையும் கைப்பற்றும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். புகார் அளிக்கப்பட்டு ஒரே நாளில் கொள்ளையர்களை பிடித்த போலீசாரை, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டியுள்ளார்.