பீலா ராஜேஷ் மீது சொத்துக் குவிப்பு புகார்! – விசாரணைக்கு பரிந்துரைத்த மத்திய அரசு

பீலா ராஜேஷ் மீது சொத்துக் குவிப்பு புகார்! – விசாரணைக்கு பரிந்துரைத்த மத்திய அரசு

சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ் சொத்துக் குவிப்பு தொடர்பான விசாரணையை நடத்த தமிழக தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
தமிழக சுகாதாரத் துறை இருந்தவராக இருந்த பீலா ராஜேஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. வருமானத்துக்கு மீறி சொத்து சேர்த்ததாக, புதிய பங்களா கட்டியதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் அவர் சுகாதாரத் துறை செயலாளர் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டார். சுகாதாரத் துறை செயலாளராக ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டார்.

பீலா ராஜேஷ் மீது சொத்துக் குவிப்பு புகார்! – விசாரணைக்கு பரிந்துரைத்த மத்திய அரசு
பீலா ராஜேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. அதே போல் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்துக்கும் ஆதாரங்களுடன் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக தலைமைச் செயலாளருக்கு மத்திய அரசின் பணியாளர் நலத்துறை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. அதில், பீலா ராஜேஷ் மீது சொத்துக் குவிப்பு புகார் வந்துள்ளது.

பீலா ராஜேஷ் மீது சொத்துக் குவிப்பு புகார்! – விசாரணைக்கு பரிந்துரைத்த மத்திய அரசு

தமது வருமானத்துக்கு அதிகமாக பல கோடி ரூபாய் அளவுக்கு பீலா ராஜேஷ் சொத்து சேர்த்துள்ளார் என்று அந்த புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் இந்த கடிதம் வைரலாக பரவி வருகிறது. பலரும் இது பற்றி கமெண்ட் செய்து வருகின்றனர்.