சிக்கினார் அதிமுக எம்.ஆர்.விஜயபாஸ்கர்… சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு!

 

சிக்கினார் அதிமுக எம்.ஆர்.விஜயபாஸ்கர்… சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு!

போக்குவரத்துறை அமைச்சராக இருந்த போது 55% அதிகமாக சொத்துக்களை சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது சொத்துகுவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த எம்.ஆர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்ததன் அடிப்படையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அவரது வீடு உள்ளிட்ட 26 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத 25 லட்சம் ரூபாயும் சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது. அதிமுகவின் முக்கிய புள்ளியான எம்.ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சிக்கினார் அதிமுக எம்.ஆர்.விஜயபாஸ்கர்… சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு!

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஓபிஎஸ், ஈபிஎஸ் அதிமுகவை பழிவாங்குவதற்காக திமுக அரசு ஏவிவிட்டு வருமான வரித்துறை சோதனை நடத்தி இருப்பதாக குற்றஞ்சாட்டினர். இதற்கு அமைச்சர்கள் ரகுபதி மற்றும் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்தனர். ஆளுநரிடம் முதல்வர் ஸ்டாலின் அளித்த புகாரின் பேரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதாக அவர்கள் விளக்கம் அளித்திருந்தனர். இது குறித்து பேசிய எம்.ஆர் விஜயபாஸ்கர், தனது வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்திற்கு கணக்கு உள்ளது. சட்ட ரீதியாக இதனை எதிர்கொள்வோம் என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக 55% சொத்து சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துகுவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளது. 2016ம் ஆண்டு ரூ.2.5 கோடியாக இருந்த அவரது சொத்துக்கள் 2021 ஆம் ஆண்டு தேர்தலில் ரூ.8.62 கோடியாக அதிகரித்துள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்த போது அவர் அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்துள்ளது. இதனால் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, சகோதரி சேகர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்து குவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளது.