செண்ட்டிமெண்ட் படி பார்த்தால் அதிமுகவுக்குத்தான் வாய்ப்பு! #Aruppukkottai

 

செண்ட்டிமெண்ட் படி பார்த்தால் அதிமுகவுக்குத்தான் வாய்ப்பு! #Aruppukkottai

ருப்புக்கோட்டையில் அதிமுகவும் திமுகவும் சமபலத்தில் இருக்கிறது. ஆனால், செண்ட்டிமெண்ட் படி பார்த்தால் அதிமுகவுக்குத்தான் வாய்ப்பு என்று சொல்கிறது நமது டாம் தமிழ் நியூஸ் சர்வே முடிவுகள்.

செண்ட்டிமெண்ட் படி பார்த்தால் அதிமுகவுக்குத்தான் வாய்ப்பு! #Aruppukkottai

அருப்புக்கோட்டை:

விருதுநகர் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது அருப்புக்கோட்டை தொகுதி. மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் பகுதியில்
அமைந்திருந்திருக்கும் அருப்புக்கோட்டையில் விவசாயம்தான் இத்தொகுதி மக்களின் முக்கிய தொழில் என்றாலும், விவசாயத்திற்கு அடுத்தபடியாக இருப்பது நெசவு
தொழில்தான்.

செங்காட்டு இருக்கை இடத்துவழி என்ற பெயர்தான் பின்னாளில் அருப்புக்கோட்டை ஆனது. இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள்.
விஜயநகரப் பேரரசு காலத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் மதுரையில் இருந்து செங்காட்டு இருக்கை இடத்துவழியில் குடியேறி வேளாண்மை தொழில்
செய்து வந்ததால் ‘அரவகோட்டை’ என இப்பகுதி அழைக்கப்பட்டது. அரவக்கோட்டை என்பதுதான் காலமாற்றத்தில் அருப்புக்கோட்டை ஆனது என்கிறார்கள்.
பக்கத்தில் உள்ள சிற்றூர்கள் மல்லிகை அரும்பு விளைச்சலுக்கு பெயர் பெற்றவை. அதனால், அரும்புகோட்டை என்று இந்த பகுதி அழைக்கப் பட்டதாகவும்,பின்னர் இது மருவி, அருப்புக்கோட்டை ஆனது என்றும் சொல்கிறார்கள். இத்தொகுதியில் 2016ன்படி 2,07,692 வாக்காளர்கள் இருக்கிறார்கள்.

செண்ட்டிமெண்ட் படி பார்த்தால் அதிமுகவுக்குத்தான் வாய்ப்பு! #Aruppukkottai

முதலமைச்சரை தந்த தொகுதி:

அதிமுக என்று தனிக்கட்சியை தொடங்கிய எம்.ஜி.ஆர். 1977ல் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடித்தார். அருப்புக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வென்ற அவர் முதலமைச்சர் ஆனார். முதலமைச்சரை தந்த தொகுதி என்ற அந்தஸ்து இருக்கிறது அருப்புக்கோட்டை தொகுதிக்கு.

4 முறை தொடர் வெற்றி கண்ட அதிமுக:

77ல் நடந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டு வென்ற பின்னர், 80ல் நடந்த தேர்தலிலும் அதிமுக வேட்பாளர் பிச்சைதான் வெற்றி பெற்றார். 84ல் நடந்த
தேர்தலிலும் அதிமுகவின் பிச்சையே வெற்றி பெற்றார். 86ல் நடந்த இடைத்தேர்தலிலும் அதிமுக பஞ்சவர்ணம்தான் வெற்றி பெற்றார்.
சென்னைக்கு ரயில் விட வேண்டும், நெசவாளர்களுக்கு கைத்தறி பூங்கா அமைக்க வேண்டும். இத்தொகுதியில் 6 முறை அதிமுகவும், 4 முறை
திமுகவும், ஒருமுறை பார்வர்டு பிளாக் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன.

செண்ட்டிமெண்ட் படி பார்த்தால் அதிமுகவுக்குத்தான் வாய்ப்பு! #Aruppukkottai

செண்டிமெண்ட்:

91தேர்தலில் இருந்து கடந்த தேர்தல் வரைக்கும் அதிமுகவும் திமுகவும் மாறிமாறி வந்திருக்கின்றன. ஒருமுறை அதிமுக வந்தால் அடுத்த முறை திமுக வந்திருக்கிறது. அதனால் இதுவே அத்தொகுதியின் ஒரு செண்டிமெண்டாக பார்க்கப்படுகிறது.

அருப்புக்கோட்டை 1991ல் அதிமுக மணிமேகலை 56,985 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக சார்பில் போட்டியிட்ட சண்முகசுந்தரம் 37,066 வாக்குகள்
பெற்று தோல்வி பெற்றார். 96ல் நடந்த தேர்தலில் திமுக தங்கபாண்டியன் 45,081 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளரான சுந்தரபாண்டியன்
28,716 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். 2001 தேர்தலில் அதிமுக சிவசாமி 49 ஆயிரத்து 307 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக சார்பில்
போட்டியிட்ட தங்கபாண்டியன் மகன் தங்கம் தென்னரசு 43 ஆயிரத்து 155 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

2006ம் ஆண்டு திமுக தங்கம் தென்னரசு 51 ஆயிரத்து 756 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். அதிமுக முருகன் 43 ஆயிரத்து 768 வாக்குகள் பெற்று தோல்வி
அடைந்தார். 2011ல் அதிமுக வைகை செல்வன் 76 ஆயிரத்து 546 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக ராமச்சந்திரன் 65 ஆயிரத்து 908 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.

2016ல் திமுக சார்பில் போட்டியிட்ட சாத்தூர் ராமச்சந்திரன் 81 ஆயிரத்து 485 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வைகைசெல்வன் 63,431 வாக்குகள்வெற்றி பெற்றார். கடந்த 30 ஆண்டுகளில் அதிமுக மூன்று முறையும் திமுக மூன்று முறையும் வெற்றி பெற்றிருக்கிறது.

செண்ட்டிமெண்ட் படி பார்த்தால் அதிமுகவுக்குத்தான் வாய்ப்பு! #Aruppukkottai

2021 சட்டமன்ற தேர்தல் வேட்பாளர்கள்:

அதிமுக – வைகை செல்வன்
திமுக – சாத்தூர் ராமச்சந்திரன்
தேமுதிக – ஆர்.ரமேஷ்

எடப்பாடி ஆட்சிக்கு எத்தனை மார்க்:

நமது டாப் தமிழ் நியூஸ் சர்வே டீம் அருப்புக்கோட்டை தொகுதியின் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு எத்தனை மார்க் போடுவீர்கள் என்ற கேள்வியை எழுப்பியபோது,

அதிமுக ஆட்சிக்கு ஜீரோதான் என்று பெரும்பாலானோர் சொல்கின்றனர். இந்த ஆட்சிக்கு மார்க்கே போடமாட்டேன் என்றே பலரும் ஆத்திரத்துடன்
சொல்கின்றனர். மார்க் போட்ட பலரும் 10க்கு 8 மார்க், 10க்கு 5 மார்க், 100க்கு 20 மார்க் என்றே சொல்கின்றனர். ஒருவர் கூட 100க்கு 100 என்று சொல்லவில்லை.

தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு:
குடிநீர் வசதி, சாலைவசதி வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. கைத்தறி பூங்கா அமைய வேண்டும் என்று நெசவாளர்களின் கனவாக இருக்கிறது.

செண்ட்டிமெண்ட் படி பார்த்தால் அதிமுகவுக்குத்தான் வாய்ப்பு! #Aruppukkottai

யாருக்கு ஓட்டு:
கடந்த 30 ஆண்டுகளாக அதிமுக,திமுகவும்தான் மாறி மாறி அருப்புக்கோட்டையை ஆளுகின்றன. அதே மாதிரிதான் நமது கருத்து கணிப்பிலும் அதிமுகவுக்குத்தான் ஓட்டு, திமுகவுக்குதான் ஓட்டுஎன்று சரிபாதியாகவே ஆதரவுக்குரல்கள் வந்தன. ஆனாலும், அந்த இரு கட்சிகளையுமே அம்மண்ணின் சீனியர்கள் பெரும்பாலானோர் வெறுக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் மக்கள் நீதி மய்யம் கமல் பெயரையும் உச்சரிக்கிறார்கள். இளைஞர்கள் பலரும் சீமான் அல்லது நோட்டோவுக்குத்தான் ஓட்டு என்று தெளிவாக இருக்கிறார்கள்.

விசைத்தறி நெசவாளர்கள் பலரும் அதிமுகவுக்கே ஓட்டு என்று கூறூகின்றனர். அதிமுக ஆட்சியில் மின்சார தட்டுப்பாடே இல்லை. அதனால் அதிமுக அரசு மீது
திருப்தியில் இருக்கின்றனர். கைத்தறி நெசவாளர்களோ திமுகவு ஆதரவு நிலையை எடுத்திருக்கிறார்கள். அதிமுக திமுகவுக்கு அடுத்தபடியாக மக்கள் நீதி மய்யம் கட்சியும், நாம் தமிழர் கட்சியும் இருக்கிறது.

’’இதுவரைக்கும் திமுகவுக்கு ஓட்டு போட்டுக்கிட்டு இருந்தேன். இப்ப முடிவை மாத்திக்கிட்டேன். அதிமுகவுக்கும் ஓட்டு போடுறதா மனசு இல்ல. ரெண்டு
கட்சியுமே ஒண்ணுதான். அதனால புதுசார் வர்ற கட்சிக்குத்தான் என் ஓட்டு. ரஜினி வந்தா அவருதான் என் சாய்ஸாக இருந்துச்சு. அவரு வராததால அந்த
நேரத்துல முடிவெடுத்து போடணும்’’ என்கிறார் முதியவர்.

சீனியர்கள் பலரும், அதிமுக- திமுகவுக்கு ஒரு மாற்றாக ரஜினிக்கு ஓட்டு போடலாமுன்னு இருந்தோம் என்கிறார்கள்.

செண்ட்டிமெண்ட் படி பார்த்தால் அதிமுகவுக்குத்தான் வாய்ப்பு! #Aruppukkottai

யாருக்கு வெற்றி:

டாப் தமிழ் நியூஸ் சர்வே முடிவுகளின் படி அருப்புக்கோட்டையில் அதிமுகவும் திமுகவும் சம பலத்தில் இருக்கின்றன. ஆனால், அத்தொகுதியின் செண்டிமெண்ட் படி பார்த்தால் அதிமுகவுக்கே வாய்ப்பு என்று தெரிகிறது.