Home அரசியல் நிர்மலா சீதாராமனை போட்டு தாக்கிய டாப்ஸி… 3 நாள் ரெய்டில் நடந்த 3 விஷயங்கள் குறித்து ஓபன் டாக்!

நிர்மலா சீதாராமனை போட்டு தாக்கிய டாப்ஸி… 3 நாள் ரெய்டில் நடந்த 3 விஷயங்கள் குறித்து ஓபன் டாக்!

நடிகை டாப்ஸி, இயக்குநர் அனுராக் காஷ்யப், தயாரிப்பாளர்கள் மது மான்டேனா, விகாஸ் பால் ஆகியோர் வீடுகளில் மார்ச் 3ஆம் தேதியிலிருந்து வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுவந்தனர். இவர்களின் வீடுகள், பாண்டம் ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவன அலுவலகம் என 20 இடங்களில் சோதனை செய்யப்பட்டது.

வரி ஏய்ப்பு காரணமாக இந்தத் திடீர் ரெய்டு நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் மத்திய அரசை எதிர்த்து கேள்வி கேட்பதால் பாஜக தான் ஐடி அதிகாரிகளை ஏவிவிட்டது என குற்றஞ்சாட்டப்பட்டது. இதனை மறுத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2013ஆம் ஆண்டு அதாவது காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோதும் டாப்ஸி, காஷ்யப் வீடுகளில் ஐடி ரெய்டு நடத்தப்பட்டதாகவும், அப்போது அது பெரிதாகப் பேசப்படவில்லை; இப்போது பாஜகவை குற்றஞ்சாட்டுகிறார்கள் எனவும் மறைமுக சாடினார்.

Nirmala Sitharaman Unveils First Set Of Measures Under Covid-19 Relief  Package

இச்சூழலில் மூன்று நாள் சோதனை முடிவுற்றதையடுத்து ஐடி ரெய்டில் நடந்தவை குறித்து சர்காஸ்டிக்காக ட்விட்டரில் நடிகை டாப்ஸி பதிவிட்டிருக்கிறார். போகுற போக்கில் நிர்மலா சீதாரமானையும் போட்டு தாக்கியிருக்கிறார். மூன்று நாள் ரெய்டில் என்னென்ன நிகழ்ந்தது என்பதைக் கூறுகிறார். அவர் தனது ட்வீட்டில், “3 நாட்கள், 3 விஷயங்களை ஐடி அதிகாரிகள் தேடினர்.

*பாரிஸில் எனக்குச் சொந்தமாக ஒரு பங்களா இருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த பங்களாவின் சாவியைத் தேடினார்கள். கோடை விடுமுறை வரப் போகுதல்லவா அதற்காக எனக்கு உதவி செய்திருக்கிறார்கள்.

Breaking: I-T raids at Tapsee Pannu, Anurag Kashyap's Mumbai properties

*என்னிடம் 5 கோடி ரூபாய்க்கான ரசீது இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. அதை எடுத்து ஃப்ரேம் செய்து என் வீட்டு சுவரில் மாட்டுவதற்காக தேடி தந்தார்கள். ஏனென்றால் அந்தப் பணம் வேண்டாம் என்று நான் ஏற்கெனவே நிராகரித்திருந்தேன்.

*மதிப்பிற்குரிய நிதியமைச்சர் சொன்னதுபோல 2013ஆம் ஆண்டு என் வீட்டில் நடந்த ரெய்டு குறித்த என்னுடைய நினைவுகளை மீண்டும் ரெய்டு செய்தனர்.

பின்குறிப்பு: இனி என்னை நான் மட்டமானவள் இல்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார். அதாவது ஒரு பிரச்சினையின்போது கங்கணா ரனாவத்தின் சகோதரி டாப்ஸியை மட்டமானவள் என்று குறிப்பிட்டிருந்தார். ஐடி ரெய்டில் ஒன்றும் கிடைக்கவில்லை என்பதே இதன்மூலம் அவர் உணர்த்துகிறார். முன்னதாக, அனுராக் காஷ்யப், இந்த ஐடி ரெய்டை வேறு விதமாக டீல் செய்தார்.

புத்தகங்கள், டிவிடி மற்றும் ப்ளுரேக்கள் இருக்கும் மிகப்பெரிய அலமாரியுடன் நின்று நக்கலாகச் சிரித்தபடி புகைப்படத்தை வெளியிட்டார். அதாவது நான் கோடிகளில் புரளவில்லை; எவ்வளவு தேடினாலும் புத்தகங்களும் படங்களின் டிவிடிக்களுமே கிடைக்கும் என்பதே அதன் உட்பொருள்.

Actor Vijay poses with fans in Neyveli, his selfie goes viral on Twitter

இதேபோல கடந்த ஆண்டு விஜய் வீட்டில் ரெய்டு நடந்தது. மத்திய அரசைப் படங்களில் விமர்சித்ததற்காக இந்த ரெய்டு நடைபெற்றதாகக் கூறப்பட்டது. அப்போதும் ஐடி அதிகாரிகளுக்கு எதுவும் கிடைக்கவில்லை. படப்பிடிப்பின்போது விஜய் வேன் மேல் ஏறி நின்று மாபெரும் ரசிகர்கள் கூட்டத்துடன் ஸ்டைலாக செல்பி எடுத்து, எனக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் தான் சொத்து என்பது போல் சொல்லாமல் சொல்லினார்.

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews