சிமெண்ட் விற்பனை அமோகம்… ரூ.563 கோடி லாபம் பார்த்த ஏ.சி.சி.

 

சிமெண்ட் விற்பனை அமோகம்… ரூ.563 கோடி லாபம் பார்த்த ஏ.சி.சி.

ஏ.சி.சி. நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.563 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் முன்னணி சிமெண்ட் உற்பதி நிறுவனங்களில் ஒன்றான ஏ.சி.சி. கடந்த மார்ச் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. ஏ.சி.சி. நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் ஒட்டு மொத்த அளவில் லாபமாக ரூ.563 கோடி ஈட்டியுள்ளது. இது 2020 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 74.2 சதவீதம் அதிகமாகும்.

சிமெண்ட் விற்பனை அமோகம்… ரூ.563 கோடி லாபம் பார்த்த ஏ.சி.சி.
ஏ.சி.சி.

2021 மார்ச் காலாண்டில் ஏ.சி.சி. நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாய் ரூ.4,213 கோடியாக உயர்ந்துள்ளது. இது 2020 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 22.7 சதவீதம் அதிகமாகும். அந்த காலாண்டில் ஏ.சி.சி. நிறுவனம் ரூ.3,433 கோடியை மொத்த வருவாயாக ஈட்டியிருந்தது. ஏ.சி.சி. நிறுவனம் ஜனவரி-டிசம்பர் காலத்தை நிதியாண்டாக கொண்டு செயல்படுகிறது.

சிமெண்ட் விற்பனை அமோகம்… ரூ.563 கோடி லாபம் பார்த்த ஏ.சி.சி.
ஏ.சி.சி.

ஏ.சி.சி. நிறுவனம் 2021 மார்ச் காலாண்டில் 79.7 லட்சம் டன் சிமெண்ட் விற்பனை செய்துள்ளது. இது 2020 மார்ச் காலாண்டைக் காட்டிலும் 21.5 சதவீதம் அதிகமாகும். 2020 மார்ச் காலாண்டில் ஏ.சி.சி. நிறுவனம் 65.6 லட்சம் டன் சிமெண்ட் விற்பனை செய்துள்ளது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த செவ்வாய்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது ஏ.சி.சி. நிறுவன பங்கு விலை 2.79 சதவீதம் சரிந்து ரூ.1,824.45ஆக குறைந்து இருந்தது.