Home இந்தியா அசத்தல் சிற்ப வேலைப்பாடுகளுடன் அபுதாபியில் அசரவைக்கும் பிரமாண்ட இந்து கோயில்!

அசத்தல் சிற்ப வேலைப்பாடுகளுடன் அபுதாபியில் அசரவைக்கும் பிரமாண்ட இந்து கோயில்!

இந்தியர்கள் பலரும் வெளிநாடுகளில் இருப்பது அனைவரும் அறிந்ததே. அவர்களில் பெரும்பாலோனோ ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை நிமித்தமாக தங்கியிருக்கின்றனர். அவர்களில் பெரும்பான்மையான இந்துக்களும் இருப்பதால், அவர்களின் மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என்று முடிவெடுத்தது அமீரகம். அதன்படி இந்துக்களுக்காகப் பிரமாண்டமான இந்து கோயிலைக் கட்டிக் கொடுக்க முடிவுசெய்தது.

அதன்படி அமீரகத்தின் தலைநகரான அபுதாபியையும் அந்நாட்டின் மிகப் பெரிய நகரமான துபாயுடன் இணைக்கும் சாலையருகே அபு முரேகா என்னுமிடத்தில் புதிய கோயில் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா 2019ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்றது. பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் அடிக்கல் நாட்டினார். அதன்பின் சில நாட்கள் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. நடுவே கொரோனா தொற்று வேறு வந்துவிட்டதால் பணிகள் தொடங்கப்படவில்லை. தற்போது மீண்டும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இப்போது வரை அடித்தளம் போடும் பணிகள் முடிவடைந்திருப்பதாக கட்டட பொறியாளர் அசோக் கொண்டெட்டி தெரிவித்துள்ளார். அடுத்த மாதத்திலிருந்து கற்கள் பதிக்கும் வேலை தொடங்கப்படும் என்று கூறினார். 2023ஆம் ஆண்டு கோயிலின் கட்டடப் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

கோயிலின் முக்கிய அம்சங்கள்

1.கோயில் கட்டுவதற்கான இடத்தை அபுதாபியின் பட்டத்து இளவரசரான ஷேக் மொஹம்மத் சயீத் நன்கொடையாக கொடுத்தார்

2.அபுதாபியிலிருந்து 30 நிமிடம், துபாயிலிருந்து 45 நிமிட பயண தூரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது

3. 7 கோபுரங்களைக் கொண்ட இந்த கோயிலை போச்சாசன்வாசி ஸ்ரீ அக்‌ஷர் புரிஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்த்தா அமைப்பு கட்டுகிறது

4.55,000 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும் இந்த கோயிலின் வாகன நிறுத்துமிடமும் அதே பரப்பளவில் இருக்கும்

5.கட்டட பணிகளுக்குத் தேவையான இளஞ்சிவப்பு மணற்கற்களும், பளிங்கு கற்களும், மற்ற சில கட்டுமான பொருட்களும் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் சுமார் 2,000 கைவினைக் கலைஞர்களைக் கொண்டு செய்யப்பட்டு அபுதாபிக்கு கொண்டுவரப்படவுள்ளது

6.ஐக்கிய அரபு அமீரகத்தில் வெயில் கொளுத்தும் என்பதால், அதைத் தாங்கும் வகையிலான சிறப்பு வாய்ந்த கற்களால் கட்டப்படுகிறது

7.ஒட்டுமொத்த சிற்பங்களும் மத நல்லிணக்கத்தையும், ஆன்மீகத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இருக்கும்

8.இந்து மத கடவுள்களின் சிலைகள் மட்டுமின்றி, பார்வையாளர் அறை, வழிபாட்டுக் கூடம், கண்காட்சிகள், கற்றல் வசதிகள், விளையாட்டு பகுதி, பூங்கா, சைவ உணவகங்கள் உள்ளிட்டவை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது

9.ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரின் புகழ்பெற்ற மாளிகைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளதை ஒத்த மணற்கற்கள் இங்கு பயன்படுத்தப்படவுள்ளது மிக முக்கியமான அம்சம்

10.இந்துமத புத்தகங்களான ராமாயணம், பகவத் கீதை கொண்ட நூலகமும் இங்கு அமைக்கப்படுகிறது

மாவட்ட செய்திகள்

தேர்தல் வீடியோஸ்

- Advertisment -
TopTamilNews