மாணவர்கள் தேர்வை முழுமையாக எழுதவில்லையெனில் ‘ஆப்சென்ட்’ – தேர்வுத்துறை

 

மாணவர்கள் தேர்வை முழுமையாக எழுதவில்லையெனில் ‘ஆப்சென்ட்’ – தேர்வுத்துறை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வந்ததால் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வை ரத்து செய்யுமாறு ஆசிரியர்கள் சங்கம் உட்பட பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக முதல்வருடன் ஆலோசனை மேற்கோண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், ஜூன் 15 ஆம் தேதி முதல் நடக்கவிருந்த 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்று அறிவித்தார். மேலும், மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளின் அடிப்படையிலும் வருகையின் அடிப்படையிலும் மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

மாணவர்கள் தேர்வை முழுமையாக எழுதவில்லையெனில் ‘ஆப்சென்ட்’ – தேர்வுத்துறை

இதனையடுத்து மாணவர்களின் தேர்வு மதிப்பெண்களை வழங்குமாறு தேர்வுத்துறை உத்தரவிட்டதன் பேரில், அனைத்து பள்ளிகளும் மாணவர்களின் மதிப்பெண்களை ஒப்படைத்தது. அந்த தேர்வுகளின் அடிப்படையில் தற்போது மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 10 ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளை முழுமையாக எழுதவில்லை என்றால் ஆப்சென்ட் அளிக்குமாறு அரசுத் தேர்வுகள் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.