kaappan-mobile kaappan-large
  • September
    21
    Saturday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


'மூன்று நாட்களில் சரண்டர் ஆவேன்' : ஏகே 47, வெடிகுண்டுகள் வைத்திருந்த எம்எல்ஏ-வின் பரபரப்பு வீடியோ!

ஆனந்த் குமார் சிங்
ஆனந்த் குமார் சிங்
Loading...

பீகார்: நான் இன்னும் மூன்று நாட்களில் சரணடைவேன் என்று பீகார் மாநிலம் மோகாமா  தொகுதி எம்.எல்.ஏ ஆனந்த் குமார் சிங் தெரிவித்துள்ளார். 

anand

பீகார் மாநிலம் மோகாமா  தொகுதி எம்.எல்.ஏ ஆனந்த் குமார் சிங். சுயேச்சை எம்.எல்.ஏவான இவரது வீட்டில்  ஆயுதங்கள் பதுக்கி வைத்திருப்பதாகக் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து அங்கு நடத்திய சோதனையில்   26 தோட்டாக்களுடன் கூடிய ஏ.கே.47 துப்பாக்கி, 2 வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் அவை செயலிழக்க வைக்கப்பட்டது. 

anant

இதுகுறித்து  பாட்னா காவல்துறை எஸ்.பி கந்தேஷ் குமார் மிஸ்ரா கூறிய  போது, 'மாவோயிஸ்ட்டுகள், பயங்கரவாதிகள் வைத்திருக்கும் ஆயுதங்கள், எம்.எல்.ஏ.ஒருவரின் வீட்டில் கைப்பற்றப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது' என்றார். ஆனந்த் குமார் சிங் மீது, பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் (உபா) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய போலீசார் அவர் வீட்டுக்குச் சென்றபோது, அவர் தப்பிவிட்டார் என்று கூறப்படுகிறது.

anant

இந்நிலையில் ஆனந்த் குமார் சிங் வீடியோ ஒன்றை நேற்று  வெளியிட்டுள்ளார். அதில் அது என் மூதாதையர் வீடு. அங்கு நான் கடந்த 14 வருடங்களாகச் செல்வதில்லை. அதனால், நான் அங்கு ஏகே 47 துப்பாக்கி, வெடிகுண்டுகள் ஆகியவற்றைப் பதுக்கி வைத்திருந்தேன் என்ற கேள்விக்கே இடமில்லை. நான் கைதுக்கு அஞ்சவில்லை. இன்னும் நான்கு நாட்களில் சரணடைவேன். எனக்கு எதிராக கூடுதல் போலீஸ் எஸ்.பி., லிபி சிங் சதி செய்கிறார்கள்' என்று கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். 

2018 TopTamilNews. All rights reserved.