மே 2இல் திமுக ஆட்சி… X factor கமல்… வெளியான அதிரடி கருத்துக்கணிப்பு!

மே 2இல் திமுக ஆட்சி… X factor கமல்… வெளியான அதிரடி கருத்துக்கணிப்பு!

பெரும்பாலும் ஏபிபி செய்தி நிறுவனமும் சி வோட்டர் எனும் தேர்தல் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து நடத்தும் கருத்துக்கணிப்புகளுக்கும் இறுதி முடிவுக்கும் பாரிய வேறுபாடு இருக்காது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய என இரு கருத்துக்கணிப்புகளையும் அந்நிறுவனங்கள் வெளியிடும். கிட்டத்தட்ட அவற்றின் கருத்துக்கணிப்பின்படியே ஆட்சி அமையும்.

மே 2இல் திமுக ஆட்சி… X factor கமல்… வெளியான அதிரடி கருத்துக்கணிப்பு!

சமீபத்தில், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பல நிறுவனங்கள் கருத்துக்கணிப்பு வெளியிட்டிருந்தபோதிலும் சி வோட்டரின் கருத்துக்கணிப்பே துல்லியமாக இருந்தது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பில் ஆம் ஆத்மி 63 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என கூறியது. சொல்லியதைப் போலவே 62 தொகுதிகளில் வெற்றியடைந்து கெஜ்ரிவால் மீண்டும் ஆட்சியமைத்தார்.

மே 2இல் திமுக ஆட்சி… X factor கமல்… வெளியான அதிரடி கருத்துக்கணிப்பு!

தற்போது தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதனை மையமாகக் கொண்டு சி வோட்டர் நிறுவனம் தமிழக தேர்தல் குறித்த கருத்துக்கணிப்பை வெளியிட்டிருக்கிறது. கூட்டணிகள் அமைவதற்கு முன்பே இக்கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டிருப்பதால் முடிவில் மாற்றம் இருக்கலாம். இருப்பினும், தேர்தலுக்குப் பின்னும் ஒரு கருத்துக்கணிப்பு வெளியிடப்படும். அதிலிருந்து முடிவுகளை நாம் ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம்.

மே 2இல் திமுக ஆட்சி… X factor கமல்… வெளியான அதிரடி கருத்துக்கணிப்பு!

எனினும் தற்போதைய கருத்துக்கணிப்பின்படி, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு 41% வாக்குகள் பெற்று 154 முதல் 162 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக இணைந்த தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டணிக்கு 28.6% வாக்குகள் பெற்று 58-66 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மே 2இல் திமுக ஆட்சி… X factor கமல்… வெளியான அதிரடி கருத்துக்கணிப்பு!

இத்தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கக் கூடிய சக்தியாக (X factor) கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 8.3% வாக்குகளைப் பெற்று 2 முதல் 6 இடங்களில் வெற்றி பெறும் எனவும், டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக 6.9% வாக்குகளுடன் 1 முதல் 5 இடங்களில் வெல்லும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதர கட்சிகள் 14.8% வாக்குகளைப் பெற்று 5-9 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.