’ஐபிஎல் ஏலம் தந்திரம் நிறைந்தது’ விலை போகாத கிரிக்கெட்டர் புஜாரா

’ஐபிஎல் ஏலம் தந்திரம் நிறைந்தது’ விலை போகாத கிரிக்கெட்டர் புஜாரா

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு ஏலம் இல்லாமல், இப்போது இருக்கும் வீரர்களை வைத்தே நடத்தப்பட விருக்கிறது என்ற செய்தி ஒருபக்கம் வருகிறது. மறுபக்கம் சென்ற முறை நடந்த ஐபிஎல் ஏலம் பற்றி புஜாரா மனம் திறந்து பேசியிருக்கிறார்.

’ஐபிஎல் ஏலம் தந்திரம் நிறைந்தது’ விலை போகாத கிரிக்கெட்டர் புஜாரா

கொரோனா தாக்கத்தினால் மார்ச்சில் தொடங்க வேண்டிய ஐபிஎல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி ரத்து செய்யப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால், செப்டம்பர் 19-ம் தேதியில் ஐக்கிய அமீரகத்தில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை வெளியாகி ரசிகர்கள் தங்கள் விருப்பமான அணி ஆடும் ஆட்டங்களைக் குறித்து வைத்துவிட்டனர்.

’ஐபிஎல் ஏலம் தந்திரம் நிறைந்தது’ விலை போகாத கிரிக்கெட்டர் புஜாரா

ஐபிஎல் 2020 க்கான போட்டியில் ஆடுவதற்கான வீரர்களைத் தேர்ந்தெடுக்கும் ஏலமுறையில் பல முக்கிய வீரர்கள் விலை போகாமல் தவிர்க்கப்பட்டனர். அவர்களில் முதன்மையானவர் புஜாரா.

பேட்ஸ்மேனான புஜாராவுக்கு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளை விடவும் டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்கே இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வாய்ப்பு அளித்திருக்கிறது. இவர் 75 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5,740 ர்ன்கள் எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 206.

’ஐபிஎல் ஏலம் தந்திரம் நிறைந்தது’ விலை போகாத கிரிக்கெட்டர் புஜாரா

இவர் இந்த ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் எடுக்கப்பட வில்லை. இது குறித்து எங்கும் பேசாத புஜாரா தற்போது மனம் திறந்திருக்கிறார்.

‘ஐபிஎல் ஏலத்தில் நான் தேர்ந்தெடுக்கப்படாமல் போனதற்கு வருத்தம் ஏதுமில்லை. அவமரியாதையாகவும் கருதவில்லை. ஏனெனில், ஐபிஎல் ஏலம் வியூகங்களை மட்டுமல்ல, தந்திரங்களும் நிறைந்தது.  உலகின் தலை சிறந்த வீரர்கள்கூட அங்கு ஏலத்தில் எடுபடாமல் போயிருக்கிறார்கள். உதாரணமாக, ஆம்லா.

’ஐபிஎல் ஏலம் தந்திரம் நிறைந்தது’ விலை போகாத கிரிக்கெட்டர் புஜாரா

என்னை ஒரு டெஸ்ட் வீரர் என்று ஒதுக்கினாலும் வெள்ளை நிறத்தில் என் திறமையைக் காட்டுவேன். மேலும் நான் உள்ளூர் போட்டிகளில் நல்ல சராசரி கொண்ட ஆட்டத்தை ஆடி வருகிறேன்’ என்று தெரிவித்திருக்கிறார்.