ரவுடி விகாஸ் துபே மனைவி எங்க கட்சி உறுப்பினரே கிடையாது.. அலறும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி..

ரவுடி விகாஸ் துபே மனைவி எங்க கட்சி உறுப்பினரே கிடையாது.. அலறும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி..

உத்தர பிரதேசத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் ரவுடி விகாஸ் துபேவை பிடிக்க அம்மாநில போலீஸ் படை சென்றது. இதனை முன்கூட்டியே அறிந்து கொண்ட ரவுடி விகாஸ் துபே டி.எஸ்.பி., 4 எஸ்.ஐ.க்கள் என மொத்தம் 7 பேர் போலீசாரை கொன்று விட்டு தப்பி ஓடிவிட்டான். இருப்பினும் நேற்று மத்திய பிரதேசத்தில் போலீசாரிடம் வசமாக மாட்டி கொண்டான்.

ரவுடி விகாஸ் துபே மனைவி எங்க கட்சி உறுப்பினரே கிடையாது.. அலறும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி..

இந்த சூழ்நிலையில் விகாஸ் துபேயின் மனைவி ரிச்சா துபே சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் என்றும், 2015ல் ரூ.20 ஆயிரம் செலுத்தி கட்சியின் நிரந்தர உறுப்பினர் ஆனார் என சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. அதோடு சமாஜ்வாடி கட்சி விழாக்களில் கலந்து கொண்டார். அந்த கட்சியின் கொள்கைகளை பிரச்சாரம் செய்ததாகவும் செய்தி கசிந்தது. மேலும் கான்பூர் பஞ்சாயத்து தேர்தலுக்கான விண்ணப்ப படிவமும் வலைதளத்தில் வெளியானது. 2015ல் ஜிலா பஞ்சாயத்து தேர்தலில் சமாஜ்வாடி சின்னத்தில் ரிச்சா துபே போட்டியிட்டதை அந்த படிவம் வெளிப்படுத்துகிறது.

ரவுடி விகாஸ் துபே மனைவி எங்க கட்சி உறுப்பினரே கிடையாது.. அலறும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி..

இன்டர்நெட்டில் வைரலாகி வரும் இந்த செய்தியால் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி பதறி போனது. மேலும் அந்த செய்தி போலி என்றும் மறுத்துள்ளது. இது தொடர்பாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அபிஷேக் மிஸ்ரா கூறுகையில், ரவுடி விகாஸ் துபேயின் மனைவி ரிச்சா துபே ஒரு போதும் எங்க கட்சியின் தீவிர உறுப்பினராக இருக்கவில்லை. தற்போது வைரலாகி வரும் ஆவணங்கள், சமாஜ்வாடி சின்னத்துக்காக அவர் விண்ணப்பம் செய்தியிருப்ததாக காட்டலாம். ஆனால் அவருக்கு எந்தவொரு சின்னத்தையும் வழங்கவில்லை. அது போலி காகிதம். எதிர் கட்சிகளின் ஐ.டி. விங்க் அதனை உருவாக்கி இருக்கலாம். இந்திய தேர்தல் ஆணையத்தின் வலைதளத்தை பார்த்து மக்கள் அதனை உறுதி செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.